சிங்கப்பூரில் போக்குவரத்து காவல்துறை நடத்திய அதிரடி சோதனை!!

சிங்கப்பூரில் போக்குவரத்து காவல்துறை நடத்திய அதிரடி சோதனை!!

சிங்கப்பூரில் கனரக வாகனங்களில் ஜனவரி 2026 ஆம் ஆண்டுக்குள் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்திருக்க வேண்டும் என்ற புதிய விதி அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த புதிய விதி 2026 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தாலும் 10 கனரக வாகனங்களில் ஒன்றில் மட்டுமே வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

2600 கனரக வாகனங்களில் 231 கனரக வாகனங்கள் மட்டுமே வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தியுள்ளதாக போக்குவரத்து காவல்துறை ஜூன் 11 ஆம் தேதி (இன்று) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

போக்குவரத்து காவல்துறை ஜூன் 9 ஆம் தேதி முதல் இரண்டு நாட்கள் கனரக வாகனங்களில் திடீரென சோதனை நடத்தியது.

சோதனையின் போது 56 லாரிகள் நிறுத்தப்பட்டன.

அதில் 32 போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டது. அவற்றில் 17 லாரி ஓட்டுநர்கள் வேகக் கட்டுப்பாட்டை மீறியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

வேகக் கட்டுப்பாட்டு கருவி இயந்திரங்களை அதிகபட்சகமாக மணிக்கு 60 கிமீ வேகமாகக் கட்டுப்படுத்துவதன் மூலம் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு சாதனம்.

சோதனையின் போது புதிய வேகக் கட்டுப்பாட்டு கருவிகளின் தேவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த TP அதிகாரிகள் லாரி ஓட்டுநர்களை ஈடுபடுத்தினர்.

3501 கிலோ முதல் 12000 கிலோ வரை அதிகபட்ச எடை கொண்ட கனரக வாகனங்களைக் கொண்ட நிறுவனங்கள் ஜனவரி 2024 முதல் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்த தொடங்கின.இந்த சாதனத்தை வாகன உரிமையாளர்கள் பொருத்துவதற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan