துவாஸ் சோதனைச் சாவடி : தானியங்கி அனுமதி விரிவாக்கம்..!! ICA அறிவிப்பு..!!
சிங்கப்பூர் : தானியங்கி பயணிகள் அனுமதி வழங்கும் முறை (Automated Clearance System) துவாஸ் சோதனைச் சாவடிக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.
கார் மற்றும் லாரி ஓட்டுநர்கள் மற்றும் பயன்களுக்கான இந்த தானியங்கி அனுமதி வழங்கும் முறை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து துவாஸ் சோதனைச் காவடியில் செயல்படுத்தப்படும் எனவும் ICA கூறியுள்ளது.
அதிக அளவிலான பயணிகள் இப்போது தரைவழி எல்லைகளைக் கடந்து செல்வதால் சுங்கச் சோதனையை மேற்கொள்கின்றனர். இந்த எண்ணிக்கை பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைகளைத் தாண்டி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரைவழி எல்லைப் பயணங்களில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் இந்த தானியங்கி அனுமதி சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த சேவையானது எல்லை பாதுகாப்பை யும், அதன் செயல்திறனையும் மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தானியங்கி அனுமதிப் பாதைகள் கள்ள நோட்டுத் தடுப்புத் தொழில்நுட்பம் மற்றும் பல்முனை பயோமெட்ரிக் அங்கீகார அமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. இவை போலி நபர்களையும், போலி ஆவணங்களையும் அடையாளம் காணும் வகையில் இருப்பதால் இது ICA – வின் திறனை மேம்படுத்துகின்றது.
மேலும் பல வாகனங்களில் உள்ள பயணிகளுக்கான அனுமதி நடைமுறைகளில் உதவுவதற்காக இந்தப் பாதைகளில் பயோமெட்ரிக் டேப்லெட்களும் பொருத்தப்பட்டுள்ளன.
ICA – வின் உருமாற்ற திட்டத்தின் அடுத்த கட்டமாக தரைவழி எல்லை பயணங்களில் ஒரு புதிய தலைமுறை தானியங்கி பயணிகள் அனுமதி வழங்கும் அமைப்புகளை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ICA செயல்பாடுகள் பிரிவின் மூத்த உதவி இயக்குனரான பை யோங்கடா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அமைப்பு உலகின் முதல் தானியங்கி தீர்வுகளில் ஒன்றாகும் எனவும், இது QR குறியீடுகள் அல்லது கடவுச் சீட்டுகளை ஸ்கேன் செய்வதன் மூலமும் முக அங்கீகார சரிபார்ப்பை இணைப்பதன் மூலமும் பல பயணிகள் தனித்தனியாக அனுமதி பெற உதவுகிறது எனவும் கூறியுள்ளார்.
இந்த புதிய தானியங்கி பயணிகள் அனுமதி வழங்கும் அமைப்பானது அதிக பாதைகளை இயக்க அனுமதிப்பதன் மூலம் அனுமதி வழங்கும் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த போக்குவரத்து திறனையும் அதிகரிக்கிறது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த தானியங்கி அனுமதி வழங்கும் முறையை செயல்படுத்துவதன் மூலம் அதிகாரிகள் மனித கணக்கெடுப்புகளை சரி பார்ப்பதை குறைக்க முடியும். ஒரே பணியாளர் ஒரு கட்டுப்பாட்டு பலகத்தின் வழியாக பல வழித்தடங்களைத் தொலைவில் இருந்து கண்காணிக்கவும், தானியங்கி பயணிகள் அனுமதி வழங்கும் வழித்தடங்களின் நிகழ் நேர காணொளி காட்சிகளைக் காணவும் முடியும்.
இந்த திட்டமானது புத்தாக்கம் மற்றும் பரிசோதனைகளை ஊக்குவிப்பதோடு களப்பணியாளர்களை முன்னெடுத்து செல்லவும் ஒரு சூழலை உருவாக்குவதாக தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும், உள்துறை அமைச்சருமான கே. சண்முகம் அவர்கள் ICA வருடாந்திர பணித் திட்டக் கருத்தரங்கில் இது குறித்து உரையாற்றியுள்ளார்.