சிங்கப்பூரில் மெடிக்கல் டெஸ்டில் என்ன செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

சிங்கப்பூரில் மெடிக்கல் டெஸ்டில் என்ன செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் சிங்கப்பூர் செல்வதற்கு முன் இந்த பதிவை பார்த்துவிட்டு சிங்கப்பூரில் என்னென்ன மருத்துவ பரிசோதனை செய்வார்கள் என்று தெரிந்து கொண்டு செல்லுங்கள்.

சிங்கப்பூர் செல்வது பலரின் கனவாக உள்ளது. ஏனென்றால், அது மிகவும் பாதுகாப்பான நாடு, நல்ல சம்பளம் என்பதால் நீங்கள் வேலைக்கு செல்லும் பொழுது கட்டாயமாக உங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வார்கள். அதில் நீங்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே உங்களால் சிங்கப்பூரில் பணிபுரிய முடியும்.

அப்படி உங்களுக்கு சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனை செய்யும் பொழுது அதில் நீங்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் உங்களை தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பி விடுவார்கள்.

நீங்கள் ஏஜெண்டர் மூலம் பணம் செலுத்தி சிங்கப்பூர் சென்றீர்கள் என்றால் மருத்துவ பரிசோதனையில் தேர்ச்சி பெறாமல் திரும்பி வந்தால் உங்களுக்கு பணம் திரும்ப கிடைக்காது.

ஆகையால் இந்த பதிவில் சிங்கப்பூரில் என்னென்ன மருத்துவ பரிசோதனை செய்வார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு இதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதை சரி பண்ணிக் கொண்டு அதன் பிறகு சிங்கப்பூர் சென்றீர்கள் என்றால் சிறப்பு.

1, மனநல குறைபாடு
2, வலிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
3, சுவாசப் பிரச்சினைகள்( ஆஸ்துமா)
4, சர்க்கரை நோய்
5, ரத்த அழுத்தம்(blood pressure)
6,TB
7, இதய சம்பந்தமான நோய்கள்.
8, மலேரியா
9, உங்கள் உடலில் ஏதாவது அறுவை சிகிச்சை செய்து உள்ளார்களா.
10,ECG 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாயம்.
11,Varicose Problem

12, ரத்த சோகை
13, சுவாசக்குழாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்.
14, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
15, கல்லீரல் வீக்கம்
16, மண்ணீரல் வீக்கம்
17, சிறுநீரகப் பிரச்சனை
18, தோல் சம்பந்தப்பட்ட நோய்( குஷ்டம், சொரியாசிஸ்)
19, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்.
20, கை, கால் இயக்கம் சரியாக உள்ளதா என்று பார்ப்பார்கள்.
21, முதுகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
22, நீங்கள் செல்லும் வேலைக்கு சம்பந்தமான பிரச்சனைகள் உங்களுக்கு ஏதாவது உள்ளதா என்று பார்ப்பார்கள்.
23, தைராய்டு பிரச்சனை
24, உங்கள் மனநிலையை சரியாக உள்ளதா என்று பார்ப்பார்கள்
25,x-ray
26, சிறுநீர் பரிசோதனை (பெண்களுக்கு கர்ப்பமாக உள்ளார்களா என்று பார்ப்பார்கள்)
27, பால்வினை சம்பந்தப்பட்ட நோய்கள்
28, இரண்டு காதுகளும் சரியாக கேட்கிறதா என்று பார்ப்பார்கள் இரண்டு மீட்டருக்கு அப்பால் நீங்கள் இருந்தாலும் உங்களுக்கு காது நன்றாக கேட்க வேண்டும்.

29, கண் பார்வை பரிசோதனை இதில் உங்கள் பார்வை அளவு குறைந்தபட்சம் 6/12 நீங்கள் கண்ணாடி போட்டோ அல்லது போடாமலோ இருக்க வேண்டும்.

30, நிறக் குறைபாடு உங்கள் கண்ணில் உள்ளதா என்று பார்ப்பார்கள்( டிரைவர் வேலை மற்றும் எலக்ட்ரிக்கல் வேலைக்கு செல்பவர்களுக்கு மட்டும்)

31,HIV test
மேற்கண்ட அனைத்து விதமான பரிசோதனைகளும் உங்களுக்கு சோதனை செய்யப்பட்டு, இவை அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்திலேயே உங்களுக்கு சிங்கப்பூரில் வேலை பார்க்கும் அனுமதி வழங்கப்படும்.

இதில் ஏதாவது உடல்நல பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால் மருத்துவரை அணுகி அதை சரி செய்து கொண்டு அதன் பின் நீங்கள் சிங்கப்பூர் சென்றால் சிறப்பு.

இதுபோன்ற சிங்கப்பூர் தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள நமது இணைய தளமான www.sgtamilan.com பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK