2025 ஆம் ஆண்டு- உலகின் செல்வந்தர்கள் பட்டியல் வெளியீடு..!!!
2025 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க தொழிலதிபர்கள் பட்டியலை பார்ச்சூன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
பார்ச்சூன் பத்திரிக்கை செல்வாக்கு மிக்க வணிக தலைவர்களின் பட்டியலை வெளியிடுவது இது இரண்டாவது முறையாகும்.
தற்போது வணிக உலகின் உயிர் நாடியை கட்டுப்படுத்தி அதன் எதிர்கால நிலப்பரப்பை வடிவமைக்கும் வகையில் நூறு வணிக தலைவர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக பத்திரிக்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.
DBS குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் சு ஷான் முதல் 30 இடங்களுக்குள் 28 வது இடத்தில் உள்ள ஒரே சிங்கப்பூரர் ஆவார். சில்லரை வங்கி செல்வ மேலாண்மை மற்றும் பெரு நிறுவன வங்கி ஆகியவற்றில் இவருக்கு 35 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் DBS குழுமத்தின் தலைமை பொறுப்பை இவர் ஏற்றுக் கொண்டார்.மேலும் வங்கியின் முதல் பெண் தலைமை நிர்வாக அதிகாரியும் இவர் என்ற பெருமைக்குரியவர் ஆனார்.
இந்த ஆண்டு மே மாதம் ஃபார்ச்சூனின் “உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க வணிகப் பெண்கள்” பட்டியலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்றொரு சிங்கப்பூரர் சீ லிமிடெட்டின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான லி சியாடோங் இவர் 97-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் ஃபோர்ப்ஸ் 2025 உலகளாவிய பில்லியனர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். சிங்கப்பூரர்கள் இடையே 3-வது இடத்தையும், உலக அளவில் 347 வது இடத்தையும் பிடித்தார். கூடுதலாக, லி சியாடோங் சிங்கப்பூர் கால்பந்து சங்கத்தின் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.
இந்த பட்டியலில் என் மீடியா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் முதலிடத்திலும், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
3 – வது இடத்தில் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் டெஸ்லா மற்றும் 4- வது இடத்திலும், ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், 5- வது இடத்தில் BYD நிறுவனர் வாங் சுவான்ஃபு ஆகியோர் உள்ளனர்.
கடந்தாண்டு(2024) ஃபார்ச்சூன் இந்த பட்டியலை முதன் முதலில் வெளியிட்ட போது, ஹாங்காங்கில் பிறந்தவரும் அப்போதைய OCBC வாங்கிய தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹெலன் வோங் 71 வது இடத்தில் இருந்தார். ஆனால் இந்த ஆண்டு பட்டியலில் இடம் பெறவில்லை.