பெயர் குறிப்பிடாத அந்த பெண் வாடிக்கையாளர் அந்த உணவகத்தில் ஒரு தட்டு ப்ரைட் ரைஸ் (Fried Rice) வாங்கியதாகவும், அதனை 3 வாய் சாப்பிட்ட பிறகு, சாதத்தில் ஒரு இறந்த பல்லியைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் கோபமடைந்த அப்பெண் அந்த உணவை தூக்கி எறிந்துள்ளார்.
இதனை கடை ஊழியர்களிடம் அப்பெண் தெரிவித்திருக்கிறார். அதற்கு மன்னிப்பு கேட்ட ஊழியர்கள் பெண்ணுக்கு 2 இலவச உணவுகளை வழங்கியுள்ளனர். ஆனால் தனக்கு பசி இல்லாமல் போய்விட்டதாகவும் அந்த பெண் கூறி உள்ளார்.
மேலும் அப்பெண் உடனடியாக அந்த உணவின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, சிங்கப்பூர் உணவு முகமை கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்றிருக்கிறார்.
இது குறித்த SFA கூறியதாவது, சம்பவம் குறித்த தாங்கள் விசாரித்து வருவதாகவும், விசாரணை மற்றும் ஆதாரங்களை சேகரிக்கும் செயல்பாட்டின் போது சம்பவத்தை புகாரளித்தவர்களிடம் இருந்து கூடுதல் விவரங்கள் தேவைப்படலாம் எனவும், ஆதாரம் உறுதியானால் நாங்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளது.
வோக் ஹே நிறுவனம் தங்களுக்கு புகார் குறித்த செய்தி தெரியும் எனவும், SFA-ன் விசாரணைக்கு தங்களது நிறுவனம் முழுமையாக ஒத்துழைக்கும் எனவும் கூறியுள்ளது.
பொதுமக்கள் விதிமுறைகளுக்கு இணங்காத எந்த ஒரு உணவு வணிக நிறுவனத்தையும் www.sfa.gov.sg/feedback என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து தங்களது புகார்களை தெரிவிக்கலாம் SFA தெரிவித்துள்ளது.