SingPass செயலியில் முக்கிய அப்டேட்..!! இன்று முதல் அமல்..!!
சிங்கப்பூரில் அரசாங்க சேவைகள், வங்கி சேவைகள் மற்றும் பல்வேறு ஆன்லைன் தளங்களைப் பாதுகாப்பாக அணுகப் பயன்படுத்தப்படும் Singpass செயலியில் முக்கிய புதிய அப்டேட் பாஸ்கீ(Passkey) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அப்டேட் இன்று (ஜூலை 1) முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த முழு விவரங்கள் பின்வருமாறு: 1.புதிய பாஸ்கீ (PASSKEY) வசதி:
👉கடவுச்சொல் தேவையில்லை:இனி நீங்கள் லாகின் (Login) செய்ய பாஸ்வேர்டுகளை (Password) டைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை; உங்கள் கைரேகை (Fingerprint) அல்லது முக அடையாளம் (Face ID)மூலமாகவே எளிதாக உள்நுழைய முடியும்.
👉மோசடி தடுப்பு: பிஷிங் போன்ற ஆன்லைன் ஏமாற்று வேலைகளில் இருந்து உங்களை பாதுகாக்க இந்த வசதியை GovTech Singapore அறிமுகப்படுத்தியுள்ளது.
👉ப்ளூடூத் பாதுகாப்பு: மற்றொரு சாதனத்தில் உங்கள் கணக்கை லாகின் செய்ய முயலும் போது உங்களின் அசல் மொபைல் அருகில் இருக்கிறதா என்பதை ப்ளூடூத்(Bluetooth Proximity Check) மூலம் சிங்பாஸ் உறுதி செய்ய முடியும். இதனால் தொலைதூர சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
👉தானியங்கி ரத்து: உங்கள் மொபைல் தொலைந்து போனால், புதிய போனில் செயலியைப் பதிவு செய்யும்போது பழைய போனில் உள்ள சிங்பாஸ் வசதி தானாகவே செயல் இழந்து விடும் .
2.மொழியை தமிழில் மாற்றுவது எப்படி? சிங்பாஸ் செயலி தமிழ் மொழியையும் முழுமையாக ஆதரிக்கிறது. உங்கள் மொபைலில் செயலியைத் தமிழுக்கு மாற்ற வேண்டும் என்றால் இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள் 👉உங்கள் போனில் உள்ள சிங்பாஸ் (Sing Pass) செயலியைத் திறக்கவும்.
👉முகப்பு பக்கத்தின் (Home Page) மேல் பகுதியில் உள்ள அமைப்புகள் (Settings) ஐக்கானை (Icon) கிளிக் செய்யவும்.
👉அதில் ‘Change Language’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
👉கொடுக்கப்பட்டுள்ள மொழிகளில் தமிழ் என்பதை தேர்ந்தெடுத்து சேமிக்கவும்.
3.செயலியைப் புதுப்பிப்பது (Update) எப்படி? இந்த புதிய பாதுகாப்பு வசதியைப் பெற, உங்கள் சிங்பாஸ் செயலியை உடனே அப்டேட் செய்ய வேண்டும்.
👉Android பயனர்கள்: Google Play Store – Singpass பக்கத்திற்குச் சென்று ‘Update’ செய்யவும்.
👉Apple (iOS) பயனர்கள்: App Store – Singpass பக்கத்திற்குச் சென்று ‘Update’ செய்யவும். இதற்கு உங்கள் ஐபோன் குறைந்தபட்சம் iOS 15 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்