சோவா சூ காங்: கார் விபத்தில் சிக்கிய 9 வயது சிறுவன்..!!
சிங்கப்பூரில் சோவா சூ காங் அவென்யூ 1-ல் உள்ள கீ ஃபுங் உணவு மையம் மற்றும் சந்தை அருகே ஒரு கார் விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் 9 வயது சிறுவன் படுகாயம் அடைந்துள்ளான்.
sgfollowsall என்ற சமூக ஊடகப் பக்கம் இன்ஸ்டாகிராமில் இந்த விபத்து குறித்த காணொளியைப் பதிவேற்றி இருந்தது.
சம்பவ இடத்தில் ஒரு காவல்துறை அதிகாரி கைப்பேசி பயன்படுத்தி அந்த விபத்தை பதிவு செய்வது போல தெரிகிறது.
சோவா சூ காங் அவென்யூ 1-ல் ஒரு காரும் 9 வயது சிறுவனும் சம்பந்தப்பட்ட இந்த சாலை விபத்து குறித்து நேற்று (மே 18) பிற்பகல் 2:15 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்று அந்த 9 வயது சிறுவனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு செல்லும்போது சிறுவன் சுயநினைவுடன் இருந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.
விபத்தில் காயம் அடைந்த சிறுவனை தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியதாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் (SCPF) தெரிவித்துள்ளனர். இந்தக் கார் விபத்து குறித்த விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.