ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..!! அச்சத்தில் மக்கள்..!!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..!! அச்சத்தில் மக்கள்..!!

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பூங்கா உள்ளது. அங்கு உள்ள விளையாட்டு திடலில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது.

திடீர் பள்ளம் ஏற்பட்ட இடம் ஹைடல் பக் எனும் பகுதியாகும்.

இந்த திடீர் பள்ளத்தால் மக்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தப் பள்ளத்தின் அளவானது எட்டு மீட்டர் அகலமும் ஐந்து மீட்டர் ஆழமும் கொண்டுள்ளது.

இந்த திடீர் பள்ளத்தால் விரைவுச்சாலை அமைக்கும் நார்த் ஈஸ்ட் லிங்க் எனும் திட்டமானது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மொத்த கட்டுமான மதிப்பானது 26 பில்லியன் ஆஸ்திரேலியா டாலர் ஆகும். சிங்கப்பூர் மதிப்பில் 22.3 பில்லியன் ஆகும்.

திடீர் பள்ளம் ஏற்பட காரணம் நார்த் ஈஸ்ட்டு லிங்க் திட்டத்திற்கான கட்டுமான பணிகளால் என்று விக்டோரியா மாநில போக்குவரத்து அமைச்சர் கேப்ரியல் வில்லியம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அங்கு கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு, இடமானது மூடப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK