ஆஸ்திரேலியாவில் நிக்கோ ஆன்டிக் என்ற 12 வயது சிறுவன் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்களுடன் கடற்கரையில் நீந்தி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சுறாமீன் தாக்கியது.
சிறுவனின் இரு கால்களும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததை அவரது பெற்றோர் அறிந்தனர்.
சிட்னியில் அண்மையில் பெய்த கனமழையில் கடற்கரைகளில் சுறா மீன்கள் உலாவுவதற்கு ஏற்ற சூழல் இருந்தது. சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட அச்சத்தில் கடற்கரைகள் சில மூடப்பட்டுள்ளன.