56 பேரைக் கைது செய்த ICA..!!காரணம் என்ன..??

56 பேரைக் கைது செய்த ICA..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) ஆனது 56 பேரை வாகன நெறிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தினால் கைது செய்துள்ளனர்.

ICA ஆனது மார்ச் 13ஆம் முதல்  மார்ச் 22 ஆம் தேதி வரை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போக்குவரத்து சட்டங்களை நடைமுறைப்படுத்தியது.

இந்த நடைமுறையின் போது விதிமுறைகளை மீறிய 56 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் இது குறித்து இன்று (மார்ச் 27) அறிக்கை  வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கைது செய்யப்பட்டுள்ள 56 ஓட்டுனர்களும் இரட்டை வெள்ளைக கோடுகளைக் கடப்பது, சட்டவிரோதமாக வலதுபுறம் திரும்புவது, ஆபத்து அல்லது தொந்தரவு ஏற்படுத்தக் கூடிய இடங்களில் வாகனங்களை நிறுத்துவது மற்றும் வரிசைகளில் முந்திச் செல்வது போன்ற பல்வேறு விதிமுறைகளை மீறியதாக தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள  56 ஓட்டுநர் 29 பேர் மேற்கட்ட விசாரணைக்காக போக்குவரத்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது.

சோதனைச் சாவடிகளில் விதிகளை மீறும் அல்லது அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்க தவறும் நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ICA வலியுறுத்தி உள்ளது.

இரட்டை வெள்ளைக் கோடுகளைத் தாண்டுவது மற்றும் வரிசையை முந்திச் செல்வது போன்ற பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக, வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் 13 ஓட்டுநர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான மற்றும் இனிமையான பயணத்தை அனுபவிக்கும் வகையில், தரைவழிச் சோதனைச் சாவடிகளைப் பயன்படுத்தும் போது பொறுமையாக இருக்க வேண்டும் எனவும், பிற நபர்களின் உணர்வுகளைப் புரிந்துக்கொண்டும், ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தும் மற்றும போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்கவும் வேண்டுமென்று பயணிகளிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK