சிங்கப்பூர் : துவாஸ் செளத் பொலிவார்டில் (South Boulevard ) உள்ள கப்பல் பட்டறையில் தொழிலாளர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் ஆனது ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று நிகழ்ந்துள்ளதாக மனிதவள அமைச்சகம் இன்று (ஏப்ரல் 9) அறிவித்துள்ளது.
அந்த ஊழியர் கப்பலுக்கு உள்ளே இருக்கும் ஒரு எஃகு குழாய்க்குள் சுயநினைவின்றி கிடந்துள்ளார். அந்த குழாய் 71 செண்டிமீட்டர் அகலம் கொண்டது.
குழாயிலிருந்து அவரைக் காப்பாற்றுவதற்காக மருத்துவ உதவியாளர்கள் வெளியேற்றினர். பின் அவரை பரிசோதித்த மருத்துவ உதவியாளர்கள் அந்த நபர் இறந்து விட்டதாக கூறினர்.
இறந்த 24 வயதுடைய அந்த நபர் பத்திரி வைக்கும் பணியைச் செய்பவர் என்று கூறப்படுகிறது. அவர் “Hwa leong offshore Engineering ” என்ற நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர் .
இந்த சம்பவம் குறித்து மனித வளம் நிச்சயம் கூறியதாவது: வேலைப் பார்க்கும் இடங்களில் மூடப்பட்ட அனைத்து இடங்களும் அடையாளம் காணும் வகையில் குறியீடுகள் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் எந்த ஒரு பணியையும் தொடங்குவதற்கு முன்பு, அது எந்த அளவு ஆபத்தானது, அந்த இடத்தில் போதுமான காற்றோட்டம் இருக்கிறதா என்று பரிசோதித்து, அதை சரி பார்த்த பிறகு வேலையைத் தொடங்குமாறு மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு (2025) 36 பணியிட மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு 0.96 மரணங்கள் என்ற அளவில் குறைந்த இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது.
கடந்தஆண்டு (2025) பணியிட மரணங்களுக்கான முக்கியக் காரணங்களாக சாலை விபத்துக்கள், கட்டமைப்பு அல்லது உபகரணச் சரிவுகள் மற்றும் உயரத்திலிருந்து விழுதல் போன்றவை அமைந்துள்ளன.