சிங்கப்பூரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

சிங்கப்பூரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

சிங்கப்பூரில் 10 வயது சிறுமியிடம் தந்தை போல் நடித்து, சிறுமியைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய கொடூரம் அரங்கேறி உள்ளது.

தனது சொந்த தந்தையின் புறக்கணிப்பால் வாடிய குழந்தையிடம் நடித்து தவறாக அவர் நடந்து கொண்டுள்ளாார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது 12 வயது. அந்த சிறுமியும், குற்றம் சாட்டப்பட்டவரும் நவம்பர் 2024 ஆம் ஆண்டு சந்தித்துள்ளனர்.

அந்த சிறுமி தனது சொந்த தந்தையின் பரபரப்பான வேலை அட்டவணை ஆனது தன்னை புறக்கணிப்பதாகவும், எனது தந்தை தன்னை விளையாட வெளியே அழைத்து சென்றதே இல்லை என்றும் அந்த சிறுமி குற்றம் சாட்டப்பட்டவரிடம் கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் தந்தை வேடம் போட முடிவு செய்து, சிறுமியின் விபரங்களை பெற்றுள்ளாார். சில நாட்களுக்குப் பிறகு அந்த சிறுமியைத் தனியாக வெளியே அழைத்து செல்ல  தொடங்கியுள்ளார்.

அவர்களது முதல் சந்திப்பில், அந்த சிறுமியின் வீட்டிற்கு காரில் சென்று அவரை உணவு என்ன அழைத்து சென்றுள்ளார். அவரின் வந்ப்புறுத்தலின் பேரில் அந்த சிறுமியும் அவரும் ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டனர்.

டிசம்பர் 3, 2027 ஆம் ஆண்டு அந்த சிறுமி மீண்டும் அவருடன் தனியாக திரைப்படத்திற்கு சென்றுள்ளார். அங்கு திரையரங்கம் கிட்டதட்ட காலியாக இருந்துள்ளது.  திரைப்படத்தின் போது அவர் சிறுமியின் தொடையில் கை வைத்துள்ளார்.

அந்த நடத்தையானது சிறுமிக்கு அளவுக்கு மீறியதாகவும் அருவருப்பதக்கதாகவும் இருந்துள்ளது. பின்பு அந்த சிறுமியை பாலியல் ரீதியாக அவர் தாக்கியுள்ளார்.

இந்த செயல்களை சங்கடமாக உணர்ந்த அந்த சிறுமி உடனடியாக அந்த இடத்தில் இருந்து விலகி சென்றுள்ளார். திரைப்படத்திற்குப் பிறகு அந்த சிறுமிக்கு அந்த நபர் மிகவும் மதிப்புமிக்க ஒரு கழுத்தணியை கொடுத்து உள்ளார்.

ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பிறகு, அக்டோபர் 28, 2025 ஆம் ஆண்டு அன்று பாலியல் வன்கொடுமைப் பற்றிய ஒரு வகுப்பில் அந்த சிறுமி கலந்து கொண்டுள்ளாார். அதற்குப் பிறகு அந்த சம்பவம் குறித்து ஆசிரியரிடம் அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.

அந்த ஆசிரியர் அந்த சிறுமியின் தந்தையிடம் கூறியதும் அவர்களின் தந்தை காவல்துறையிடம் இந்த சம்பவம் குறித்த புகார் அளித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் புகார் அளித்த அன்று மாலையை கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் சிறுமியை நான் துன்புறுத்தவில்லை என்றும் பாப்கான் எடுக்கும்போது அவளது தொடையில் உரசியதாகவும் நடந்தது அனைத்தும் தற்செயல் என்றும் காவல்துறையிடம் அந்த நபர் கூறியுள்ளார்.

ஆனால் சிறார்கள் உள்ளடக்கிய ஆபாசமான வீடியோக்களைப் பரப்புதல் மற்றும் பாலியல் பரிவர்த்தனைகளுக்காக வெளிநாட்டு பயணங்களை ஏற்பாடு செய்தல் போன்ற பல குற்றங்களுக்காக அவர் 2015ல் ஏற்கனவே குற்றங்களை ஒப்புக்கொண்டு கைது செய்யப்பட்டார் என்று அரசு தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி உள்ளது.

அனைத்தையும் கேட்ட நீதிபதி தண்டனை வழங்கும்போது குற்றம் சாட்டப்பட்டவரின் குற்ற பதிவையும் கருத்தில் கொண்டு, அவருக்கு 21 மாத சிறைத் தண்டனையும், 3 பிரம்படிகளையும் அவருக்கு வழங்கியுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK