சுற்றுலாத் துறையிலும் AI தொழில்நுட்பம்..!! எவ்வாறு செயல்படுகிறது..??
சிங்கப்பூர் : செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பது தற்பொழுது அனைத்து துறைகளிலும் செயல்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவானது சுற்றுலாத் துறையிலும் அதனது பங்களிப்பை அளித்து வருகிறது.
ஹோட்டல் அறைகளில் குரல் மூலம் கட்டுப்படுத்தும் தொலைக்காட்சி மற்றும் விளக்குகள் முதல் பயணத் திட்டமிடல் வரை வணிக நிறுவனங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.
இந்த தொழில்நுட்பச் சேவையானது திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பயணத்தின் அனுபவத்தையும் மாற்றியமைக்கும் வகையில் உள்ளது.
ஹோட்டல் அறையில் சோபாவில் அமர்ந்தபடி, ஹாய் தயவு செய்து டிவியை ஆன் செய்ய முடியுமா? என்று கேட்டால் 30 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் அந்த Al குரல் நிச்சயமாக டிவி ஆன் செய்யப்படுகிறது என்று பதில் அளிக்கிறது.
இந்த AI- ஆர் அறையில் உள்ள டிவி, விளக்குகள் மற்றும் குளிரூட்டியை குரல் மூலம் கட்டுப்படுத்தவும் முடியும். அதுமட்டுமல்லாமல் வீட்டு பராமரிப்பு சேவைகள், அலங்காரங்கள், வானிலை அல்லது அருகில் உள்ள சுரங்க ரயில் நிலையங்களையும் சரிபார்க்கவும் முடியும்.
இதில் ஆங்கில மொழியைத் தவிர சீன, தாய், ஜப்பானிய மற்றும் கொரிய மொழிகளும் அடங்கியுள்ளன.
2024 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் உள்ள காப்தோர்ன் ரிவர்சைட் ஹோட்டலுக்கு சொந்தமான மில்லினியம் ஹோட்டல்ஸ் & ரீசார்ட்ஸ், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 8 ஹோட்டல்களில் 3,300 க்கும் மேற்பட்ட AI சேவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதன் மூலம் 52.6 லட்சத்துக்கும் அதிகமான விருந்தினர் தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த புதிய திறனானது ஹோட்டல்களின் செயல் திறனை மேம்படுத்தவும். பணியாளர்களை உகந்த முறையில் பயன்படுத்தவும் உதவுகிறது.
செயற்கை நுண்ணறிவு மூலம் 5 அல்லது 6 வினாடிகளுக்குள் அனைத்து தொடர்புடையத் துறைகளுக்கும் தகவல்களை அனுப்ப முடிவதாகவும், அழைப்புகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க 50% குறைக்கப்பட்டுள்ளதாக ரிவர்சைட் ஹோட்டலின் ஹவுஸ்கீப்பிங் இயக்குநரான லி ருச்சாவோ கூறியுள்ளார்.
இந்த தேவையானது தற்பொழுது அமெரிக்காவில் தொடங்கி, இந்த அமைப்பை மற்ற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நியூயார்க் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள எம் சோசியல் ஹோட்டலில் இந்த ஆண்டின் மூன்றாம் காலாணயிடில் 500க்கும் மேற்பட்ட Al சாதனங்கள் அமைக்கப்படவுள்ளது.