சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!!
சிங்கப்பூர் : சாங்கி விமான நிலையத்தில் உள்ள போக்குவரத்து பகுதியில் 2 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் 3 வெளிநாட்டினர்களைக் காவல்துறையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
காவல்துறை இன்று (ஏப்ரல் 4) இது குறித்த ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 – இல் உள்ள போக்குவரத்து பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி அன்று ஒரு திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அன்று பிற்பகல் சுமார் 2 : 40 மணியளவில் ஒரு சில்லறை விற்பனை கடையில் திருட்டு சம்பவம் நடந்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. கடை உதவியாளர் ஒருவர் தனது ஒரு ஜோடி சூரியக் கண்ணாடிகள் காணாமல் போனதை கண்டறிந்துள்ளார்.
விமான நிலைய காவல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, சிசிடிவி காட்சிகளில் ஆய்வு மேற்கொண்டதில் 60 வயது பிரெஞ்சுக்காரர் ஒருவர் இந்தத் திருட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
அந்த சிசிடிவி காட்சிகளில் அவர் $751.38 மதிப்புள்ள ஒரு ஜோடி கண்ணாடிகளை எடுத்துக்கொண்ட பணம் செலுத்தாமல் கடையை விட்டு வெளியேறுவது தெரிகிறது.
விமானம் புறப்படுவதற்கு முன்பே போலீசார் அந்த நபரை கைது செய்து திருடப்பட்ட பொருட்களை மீட்டனர். மேலும் மற்றொரு சில்லறை விற்பனைக் கடையில் இருந்த திருடப்பட்ட $69.49 மதிப்புடைய இரண்டு தேநீர் டப்பாக்கடையும் அந்த நபரிடமிருந்து காவல்துறையினர் கண்டெடுத்தனர்.
மேலும் இரண்டாவது திருட்டு ஏப்ரல் 23ஆம் தேதி என்று காலை 7:10 மணியளவில் சாங்கி விமான நிலையத்தின் முனையம் 3-ல் உள்ள போக்குவரத்து பகுதியில் நிகழ்ந்துள்ளது. தகவல் கிடைத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அங்கு ஒரு சில்லறைக் கடை ஊழியர் 3 கை காப்புகள் மற்றும் 3 வளையல் காணாமல் போனதைக் கண்டறிந்தார். அந்த கடையின் உதவியாளர் வாடிக்கையாளருக்கு சேவை செய்து கொண்டிருக்கும் போது 59 மற்றும் 61 வயதுடைய இரண்டு இந்தியப் பெண்கள் , $2,738,52 மதிப்புடைய 3 கைகாப்புகள், 3 வளையல்கள், 2 மோதிரங்கள் மற்றும் 1 கைக்கடிகாரத்தை திருடுவது சிசிடிவி காட்சிகளில் தெரிகிறது.
பொருள்களைத் திருடியவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பே அவர்களை காவல்துறையினர் கைது செய்து, திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளனர். மேலும் அந்த இரு பெண்களும் மற்றொரு சில்லறை விற்பனைக் கடையிலிருந்து $32.66 மதிப்புடைய 2 பொம்மை கார்களையும், 1 சாவிக்கொத்தையும் திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருட்டில் ஈடுபட்ட 2 நபர்கள் மீதும் நாளை (மே 5) 2 திருட்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மேலும் பிரெஞ்சுக்காரரான அந்த சந்தேக நபர் மீது, மோசடி செய்து சொத்தைப் பெற்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட உள்ளது. அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை அல்லது $ 3,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.