சிங்கப்பூரில் அதிகமாகும் Scam..!! அரசின் புதிய யுக்தி..!!

சிங்கப்பூரில் அதிகமாகும் Scam..!! அரசின் புதிய யுக்தி..!!

சிங்கப்பூரில் தற்போது ஆன்லைன் மூலமாக மோசடி நடவடிக்கைகள் அதிகமாக நடந்து வருகின்றன.


இதனை தடுப்பதற்கு டெலிகிராம் உடனடி செய்தி மென்பொருளை பயன்படுத்தி அதன் மூலம் நடைபெறும் போதைப் பொருள் கடத்தல் மோசடி மற்றும் பாலியல் குற்றங்கள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு உள்துறை அமைச்சகம் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகிறதா என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இது குறித்த சிங்கப்பூரில் உள்துறை மற்றும் சமூக குடும்ப மேம்பாட்டு துறை இணை அமைச்சர் கோ போ மிங் பதில் அளித்துள்ளார். மோசடியை எதிர்த்து போராடுவதில் அதிகாரிகள் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றனர் எனவும் இது தொடர்புடைய பிரச்சனைகளை முழுமையாக கையாள்வதற்காக டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களுடன் இணைந்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவார்கள் என்றும் கூறியுள்ளார்.

டெலிகிராமில் பெறப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்வதாக கூறும் சில செய்திகளை நான் பின் தொடர்ந்து உள்ளேன். மேலும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவிடம் நாங்கள் இது குறித்து விவாதித்த போது, போதைப்பொருள் விற்பனைக்கானதாக இருந்தாலும் அல்லது பாலியல் தொடர்பானதாக இருந்தாலும் இந்த செய்திகளில் பல உண்மையாக மோசடி போல நடித்து ஏமாற்றுவதை நாங்கள் உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடனடிச் செய்தி மென்பொருள் மூலமாக செய்யப்படும் குற்றங்கள் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இணையத்தில் குற்ற அபாயங்கள் சட்டத்தின் கீழ் உள்ள நடத்தை விதிகளுக்கு இணங்க மேலும் மோசடி தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு டெலிகிராம் உள்ளிட்ட இணைய சேவை வழங்குநர்களுடன் அரசாங்கம் இந்த ஆண்டு (2026) இணைந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் குற்றங்களிலிருந்து சிங்கப்பூர் பயனர்களை பாதுகாப்பதில் தொடர்புடைய சட்டங்களும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளும் தொடர்ந்து வலுப்படுத்தி உள்ளதாகவும் இது பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் அவற்றை மறுபரிசீலனை செய்யும் எனவும் திரு கோ போ மிங் தெரிவித்துள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.