சிங்கப்பூர் அழகு நிலையங்களில் சட்டவிரோத செயல்கள்..!! நடவடிக்கை எடுத்த காவல்துறை..!!

சிங்கப்பூர் அழகு நிலையங்களில் சட்டவிரோத செயல்கள்..!! நடவடிக்கை எடுத்த காவல்துறை..!!

சிங்கப்பூர் : இந்த ஆண்டு (2026) மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை, ஜூரோங் கிழக்கு பகுதியில் உள்ள அழகு மற்றும் ஆரோக்கிய நிலையங்களில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் பல்வேறு அரசு நிறுவனங்கள் இணைந்து ஒரு அமலாக்க நடவடிக்கையை ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கையின் முடிவில் 19 பெண்களைக் கைது செய்துள்ளனர். மேலும் 8 அழகு மற்றும் ஆரோக்கிய நிறுவனங்கள் தற்போது காவல்துறையின் விசாரணையில் உள்ளன.

சிங்கப்பூர் காவல்துறை இந்த செய்தி குறித்து ஒரு அறிக்கையை இன்று (மே 7) வெளியிட்டுள்ளது. கிளமென்டி காவல் பிரிவு, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு அமைச்சகம் மற்றும் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த அமலாக்க அதிகாரிகள், இந்த ஆண்டு (2026) மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் ஜூரோங் கிழக்கு அவென்யூ 1 மற்றும் ஸ்ட்ரீட் 31 ஆகிய பகுதிகளில் ஒரு கூட்டு அமலாக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையில் அழகு நிலையங்கள் மற்றும் மசாஜ் பாலர்கள் உள்ளிட்ட அழகு மற்றும் ஆரோக்கிய நிறுவனங்களை அதிகாரிகள் குறிவைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 24 முதல் 55 வயதிற்கு உட்பட்ட மொத்தம் 19 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 14 பேர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகவும், மற்ற 5 பேர் பணி அனுமதி விதிமுறைகளை மீறியதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பாரம்பரிய சீன மருத்துவ நிலையங்கள் மற்றும் 3 மசாஜ் நிலையங்களில் இந்த பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

மேலும் தற்போது 8 நிறுவனங்கள் காவல்துறையின் விசாரணையில் உள்ளன. அவற்றில் 7 முறையான உரிமங்கள் இல்லாமல் மசாஜ் சேவைகளை வழங்கும் நிறுவனங்களாகும். மற்றொரு நிறுவனம் தனது ஊழியர்கள் பாலியல் சேவைகளை வழங்குவதில்லை என்பதை உறுதி செய்ய தவறிய நிறுவனம் ஆகும்.

அழகு மற்றும் சுகாதார நிலையங்களில் இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK