உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி சோதனை..!! 30 பேர் கைது..!!
சிங்கப்பூர்: மே 28ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை வார விடுமுறையின் போது, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 30 ஓட்டுநர்களை குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டு வாகனங்களை ஓட்டிய 9 ஓட்டுநர்களும் அதில் அடங்குவர். இரட்டை வெள்ளை கோடுகளைத் தாண்டியதற்காகவும், வரிசையை மீறி முந்திச் சென்றதற்காகவும் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட அந்த வாகனங்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று (ஜூன் 5) ICA அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் போது இரட்டை வெள்ளைக் கோடுகளைத் தாண்டுவது, சட்டவிரோதமாக வலதுபுறம் திரும்புவது, ஆபத்து இடையூறு அல்லது தேவையற்ற சிரமங்களை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்துவது, வரிசையை மீறிய ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளது கூறியுள்ளது.
நிலவழிச் சோதனைச் சாவடிகளைப் பயன்படுத்தும் போது போக்குவரத்து சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் எனவும், சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் ICA பொருத்தியுள்ளது. மேலும் சாலை விதிகளை மீறுவதால் மற்ற வாகன ஓட்டுநர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்றும் ICA சுட்டிக்காட்டி உள்ளது.