மலேசியா வனப் பூங்கா அருவியில் தவறி விழுந்த சிங்கப்பூர் பெண்..!! பத்திரமாக மீட்பு..!!
மலேசியா: மலேசியாவில் உள்ள ரவாங் நகருக்கு அருகே இருக்கும் காஞ்சிங் சுற்றுச்சூழல் வனப் பூங்காவில் ஜூன் 6-ம் தேதி பூங்காவிற்கு சென்ற பெண் தவறுதலாக கால் இடறி அருவியில் விழுந்துள்ளார்.
இதனை அடுத்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தூக்குப் படுக்கையுடன் வனப் பூங்காவிற்கு விரைந்து சென்றதாக அந்தப் படையின் தலைவர் ஸைதி கூறியுள்ளார்.
தவறி விழுந்த பெண்ணை பாதுகாப்புடன் மீட்பதற்காக குழு ஒன்று உடனடியாக அனுப்பப்பட்டதையும் அவர் தெரிவித்தார்.
மேலும் காயமடைந்த பெண்ணை மலையில் இருந்து கீழே இறக்குவதற்காக அவர்கள் அறிவிப்பகுதிக்குள் நுழைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அதன் பிறகு அவரை பரிசோதிப்பதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ ஊழியர்களிடம் அந்த பெண்ணை ஒப்படைத்ததாக கூறப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் உடலில் ஏற்பட்ட காயம் பற்றி விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
அறிவியலும் ஆற்றுப்பகுதிகளிலும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் அந்தந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கின்ற எச்சரிக்கை அறிவிப்பு பலகைகளை பார்த்து அதன்படி பின்பற்ற வேண்டும் என்றும் படையின் தலைவர் கூறியுள்ளார்.