அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் எதுவும் இதனால் சேதமடையவில்லை என செய்தி வெளியாகியுள்ளது.
‘ஈகிள் விங்ஸ் 3’ என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த படகு 33.8 மீட்டர்(111 அடி) நீளம் கொண்டது என்று கூறப்படுகிறது. அந்த சொகுசு படகில் கிட்டத்தட்ட 50 பயணிகள் தங்க முடியும்.
மேலும் அதில் தனித்துவ உணவருந்தும் பகுதி மற்றும் “ஜக்கூசி” குளியல் தொட்டி போன்ற நவீன வசதிகளும் உள்ளன. இந்த படகு முக்கியமாக தனியார் மற்றும் பெருநகர நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இன்று (ஜூன் 7) காலை 8:00 மணி அளவில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது, எனும் தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
தீ விபத்தையெடுத்து சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையின் (SCDF) தீயணைப்பு வாகனம் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்ததாக சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
காலை 10:30 மணி வரை அப்படஙகு தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததாகவும், தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பாய்ச்சி தீயைப் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.