உஜ்வாலா பயனாளர்களுக்கு அதிர்ச்சி..!! மானிய சிலிண்டர்கள் இனி 4 மட்டுமே.!!

உஜ்வாலா பயனாளர்களுக்கு அதிர்ச்சி..!! மானிய சிலிண்டர்கள் இனி 4 மட்டுமே.!!

உஜ்வாலா திட்டப் பயனாளர்களுக்கான மானிய சிலிண்டர் எண்ணிக்கையை ஆண்டுக்கு 9லிருந்து 4 -ஆக மத்திய அரசு குறைத்துள்ளது.

ஏழை குடும்பங்களுக்கு மானிய விலையில் கேஸ் சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் 14.2 கிலோ எடையில் ஆண்டுதோறும் 12 சிலிண்டர் வழங்கப்பட்ட வந்தன.

 

கடந்து 2022 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 12 சிலிண்டர் வரை ரூ.200 மானியம் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இது அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. பின்னர் இந்த மானிய தொகை ரூ.300 ஆக உயர்த்தப்பட்டது.

இவ்வாறு ஆண்டுதோறும் வழங்கப்படும் மானிய சிலிண்டர் எண்ணிக்கை கடந்த ஆண்டு (2025) 9 ஆக குறைக்கப்பட்டது.

 

தற்போது இந்த எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பிரவீன் மால் கனூஜா தெரிவித்துள்ளார்.கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உஜ்வாலா பயனாளர்களின் சராசரி ஆண்டு நுகர்வோருக்கு பெரும் அளவில் ஒத்துபோவதாக அவர் கூறியுள்ளார்.

 

வளைகுடா போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் கேஸ் கட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வணிகரீதியான மற்றும் வீட்டு பயன்பாடு சிலிண்டர்களுக்கான விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 மாதங்களில் மட்டும் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை சுமார் ரூ.100 வரை அதிகரித்துள்ளது.

இதன் மூலம் கேஸ் சிலிண்டர் விலை ரூ.950க்கு மேல் உயர்ந்துள்ளது. இதில் உஜ்வாலா பயனாளிகளுக்கு ரூ.300 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. பெரும் தட்டுப்பாட்டு நிலவிவரும் இந்த சூழ்நிலையில் சிலிண்டர் ஒன்றின் விநியோகத்துக்கு அரசு ரூ.1600 வரை செலவிடுகிறது.

 

ஆனாலும் இந்திய குடும்பங்கள் சிலிண்டருக்கு குறைந்த விலையை செலுத்தி வருகின்றனர். அதிலும் உஜ்வாலா  பயனாளர்களுக்கு சுமார் ரூ.1000 வரை சேமிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது என்று பிரவீன் மால் கனூஜா தெரிவித்துள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK