தவறி விழுந்த முதியவருக்கு உதவிய பேருந்து ஓட்டுநர்..!! SBS டிரான்சிட் நிறுவனம் பாராட்டு..!!

தவறி விழுந்த முதியவருக்கு உதவிய பேருந்து ஓட்டுநர்..!! SBS டிரான்சிட் நிறுவனம் பாராட்டு..!!

சிங்கப்பூர்:  சின் மிங் சாலையை கடக்கும்பொழுது முதியவர் ஒருவர் நடைபாதை விளம்பில் தவறி முன்னோக்கி விழுந்துள்ளார்.

சம்பவம் நடந்த அந்த வழியில் சென்ற எண் 130 பேருந்தை ஒட்டிக் கொண்டிருந்த SBS Transit பேருந்து ஓட்டுநர் ஒருவர் அந்த முதியவருக்கு உதவுவதற்காக பேருந்தை நிறுத்தி உள்ளார்.

மூத்த பேருந்து ஓட்டுறரான கான் வாய் லூனின் இந்த நற்செயலைப் பாராட்டும் விதமாக SBS டிரான்சிட் நிறுவனம் நேற்று (ஜூன் 12) தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்து கொண்டுள்ளது.

அப்பதிவில் முதியவர் ஒருவர் சாலையைக் கடப்பதைக் கவனித்த ஓட்டுநர் நடைபாதை விளிம்பில் ஏறும்போது அவர் தடுமாறி விழுந்ததை கண்டுள்ளார்.

அதன் பிறகு அவர் தமது பேருந்தை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு அருகில் இருந்த ஒரு வழிப்போக்கருடன் சேர்ந்து அந்த முதியவருக்கு உதவி செய்துள்ளார். அந்த முதியவருக்கு நெற்றி மற்றும் மூக்கில் சிராய்ப்பு காயங்கள் இருப்பதையும் அந்த ஓட்டுநர் கவனித்துள்ளார்.

முதியவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதற்காக அவர் பேருந்தில் இருந்து முதலுதவி பெட்டி ஒன்றையும் எடுத்து வந்ததுள்ளார்.

பேருந்து நிலையத்தில் இருந்த இடத்தில் அவரை அமர வைத்து, தனது பயணத்தை தொடரும் முன்பு ரத்தக்கசுவை கட்டுப்படுத்த ஓட்டுநர் முயன்றுள்ளார் என்பதையும் SBS டிரான்சிட் நிறுவனம் பதிவிட்டு அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்து பேசிய அந்த ஓட்டுனர் உதவி தேவைப்படும் ஒருவருக்கு என்னால் உதவ முடிந்தால், நான் நிச்சயமாக உதவ முன் வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK