அந்தப் பேருந்து சாலையோரத்தில் இருந்த கூரையிடப்பட்ட நடைபாதையில் மோத இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் இதில் காயம் ஏற்படவில்லை.
இச்சம்பவம் குறித்த புகைப்படங்கள் ஆனது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. புதிய MRT பேருந்தின் முன்பகுதி சாலையின் நடுப்பகுதி தடுப்பில் மோதி, நொறுங்கி இருப்பது அந்த புகைப்படத்தில் தெரிகிறது.
மேலும் பேருந்தின் முன்பகுதிக்கு அருகில் இருந்த போக்குவரத்து கேமரா ஒன்று தரையில் சாய்ந்துள்ளது. அந்த பேருந்து சாலையின் நடுப்பகுதி தடுப்பிற்கு அருகில் உள்ள கூரையிடப்பட்ட நடைபாதைக்குள் கிட்டத்தட்ட தூக்கி வீசப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல் ஆனது நேற்று (ஜூன் 14) மதியம் சுமார் 12:45 மணி அளவில் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்தனர். மேலும் 58 வயதான பேருந்து ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.