சிங்கப்பூரில் HDB குடியிருப்பில் தீ விபத்து..!! தீயை அணைக்க அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன..??
சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 14) மதியம் போனா விஸ்டாவில் உள்ள ஹாலண்ட் சாலை பிளாக் 9 இல் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தஞ்சோங் பாகர் GRC-யின் நாடாளுமன்ற உறுப்பினரும், புவனா விஸ்டாவின் பொறுப்பாளரும், சிங்கப்பூரின் பொது சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும், பாதுகாப்பு அமைச்சருமான சான் சுன் சிங் ஹாலண்ட் சாலையில் உள்ள பிளாக் 9-ல் ஒரு குடியிருப்பின் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக நேற்று (ஜூன் 14) தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அப்பதிவில் இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் யாரும் இல்லை எனவும் அதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
குடியிருப்பில் இருந்த குடியிருப்பளர்கள் உடனடியாக குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு இது குறித்த தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தங்களுக்கு பிற்பகல் 3:30 மணி அளவில் தகவல் கிடைத்ததாக SCDF வீரர்கள் தெரிவித்துள்ளனர்.