சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிள் திருட்டு..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!
சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
உட்லண்ட்ஸ் குலோஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஜூன் 13ஆம் தேதி அன்று காலை 11:20 மணியளவில் காணாமல் போய் உள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.
இது குறித்த விசாரணை மேற்கொண்டதில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காணொளிகளைக் கண்டு உட்லண்ட்ஸ் காவல்துறை தீர்வு அதிகாரிகள் மோட்டார் சைக்கிளைத் திருடிய 5 நபர்களை அடையாளம் கண்டனர்.
பிறகு அந்த 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அந்த மோட்டார் சைக்கிளை ஜூன் 10 ஆம் தேதி அதிகாலை 2:30 மணி அளவில் திருடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் எந்த விதத்திலோ அந்த மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தை இயக்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அந்த மோட்டார் சைக்கிளின் மூலம் இன்ப உலா சென்றதாகவும் அவருக்கு தகுந்த ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருந்ததால் அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்களிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பத்திரமாக மீட்கப்பட்டது. மேலும் அவர்கள் மீது வாகனத்தை திருடியதற்காக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.