உலகின் கவனத்தை ஈர்த்த சாங்கி விமான நிலையம்..!! பயணிகள் எண்ணிக்கையில் புதிய உச்சம்..!!

உலகின் கவனத்தை ஈர்த்த சாங்கி விமான நிலையம்..!! பயணிகள் எண்ணிக்கையில் புதிய உச்சம்..!!

சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையம் (SIA) 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், இதுவரை இல்லாத மிக அதிக அளவாக 70.4 மில்லியன் பயணிகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.

இருப்பினும் அதே காலகட்டத்தில் விமான நிலையத்தின் ஒட்டுமொத்த மின்சார மற்றும் தண்ணீர் பயன்பாடு மிகவும் கணிசமாக குறைந்துள்ளது என்று சாங்கி விமான நிலையக் குழுமம் ஜூன் 16ஆம் தேதி அன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

விமான நிலையத்தின் தண்ணீர் பயன்பாடு 24.4% ஏற்காடு குறைந்துள்ளது; 2.32 மில்லியன் கன  மீட்டராக பதிவாகியுள்ளது. இது 300 ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் தண்ணீர் அளவுக்கு இணையான சேமிப்பாகும்.

இதேபோல் மின்சாரப் பயன்பாடும் 19.3% விழுக்காடு குறைந்தது, 368 ஜிகாவாட் மணியாக குறைந்துள்ளது. இந்த மின்சாரத்தைக் கொண்டு சுமார் 19,800 அடுக்குமாடி வீடுகளுக்கு ஒரு ஆண்டு முழுவதும் மின்சாரம் வழங்க முடியும்.

முனையங்களில் செயல்படுத்தப்பட்ட பல ஆண்டுகாலப் பொறியியல் திட்டங்களும் புத்தக நடவடிக்கைகளும் இந்த நன்மதிப்புமிக்க சேமிப்புக்கு காரணம் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்துள்ளது.

குளிர்சாதன க் கட்டமைப்புகளில் இருந்து வெளியேறும் நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு 10,000 கன மீட்டர் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

கழிவறைகளில் இருந்த 170 க்கும் மேற்பட்ட கையால் திறக்கும் தண்ணீர் குழாய்களுக்கு பதிலாக தானியங்கி தொடு உணர் தண்ணீர்க் குழாய்கள்  பயன்படுத்தப்படுவதால் 60% தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

இது தவிர 2.2 ஹெக்டர் பரப்பளவிலானன விமான நிலையத் தாவரப் பண்ணையில் மழைநீர் சேகரிப்பு உட்கட்டமைப்பு வசதிகள் மூலம் 6,900 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட இரு சேகரிப்பு முறைகளில் நீர் சேமிக்கப்பட்டு பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK