சிங்கப்பூரில் திடீரென தீ பற்றி எரிந்த கார்..!! டூசன் சாலையில் பரபரப்பு..!!
சிங்கப்பூர்: ஸ்ட்ராத்மோர் அவென்யூ மற்றும் டூசன் சாலை சந்திப்பில் ஜூன் 16ஆம் தேதி அன்று சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென தீப்பிடித்து எறிந்ததில் அங்கு பரபரப்பு நிலவியது.
சம்பவ இடத்திலிருந்து அடர்த்தியான கரும்புகை வெளியேறி உள்ளது. தீயின் தாக்கமானது மிகவும் கவலை அளிக்கும் விதத்தில் இருந்துள்ளது.
இச்சம்பம் குறித்த சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) ஜூன் 16ஆம் தேதி அன்று இரவு சுமார் 9:20 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த SCDFவீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீர்த்தாரை பீரங்கிகளையும், அழுத்தப்பட்ட காற்று நுரைப் பொதிகளையும் பயன்படுத்தி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் குறித்த காணொளி ஆனது sgfollowsall என்ற சமூக ஊடகப் பக்கத்தில் இணையவாசி ஒருவரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அந்த காணொளியில் மெர்சிடிஸ் பென்சஸ் CLA செடான் கார் ஒன்று சாலையின் நடுவில் நின்று கொண்டிருப்பதும், தீப்பிழம்புகளால் சூழப்பட்டு அதிக அளவில் கரும்புகை வெளியேறுவது தெரிகிறது.