சிங்கப்பூர் சாலையில் கோர விபத்து..!!ஓட்டுநர் தப்பியோட்டம்..!!

சிங்கப்பூர் சாலையில் கோர விபத்து..!! ஓட்டுநர் தப்பியோட்டம்..!!

சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 17) காலை கல்லாங் பகுதியில் சிவப்பு நிற செடான் கார் ஒன்று சாலையின் நடுவில் இருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர்புறப் பாதைக்கு திரும்பி ஒரு டாக்ஸியுடன் மோதியதில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்ததையெடுத்து ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து செல்ல முயன்றுள்ளார். அவர் சுரங்கப்பாதை நிலையத்தை நோக்கி ஓடியதாக அதனை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த காணொளிகள் மற்றும் புகைப்படங்களானது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.இந்த விபத்தானது பெண்ட மீர் MRT நிலையத்தில் வெளியேறும் வாயிலுக்கு வெளியே உள்ள சாலையில் நடந்துள்ளது.

இணையத்தில் பரவும் காணொளிகளில் சிவப்பு நிற காரின் முன் பகுதி கடுமையாக சேதம் அடைந்திருப்பதும், அதன் முகப்ப மூடி ஊருக்குலைந்து மேல்நோக்கித் தூக்கப்பட்டு இருப்பதும், முன்பக்க கண்ணாடி நொறுங்கியிருப்பதும், காரின் பாகங்கள் தரையில் சிதறி கிடப்பதும் தெரிகிறது.

இதன் மூலம் இந்த விபத்தானது மிகவும் கோரமாக நடந்திருப்பது என்பதைக் குறிக்கிறது. சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலியில் குறைந்தது 4 பகுதிகள் சேதம் அடைந்திருக்கும். மேலும் சில நடப்பு வேலிகள் சாலையின் மேற்பரப்பில் சிதறி கிடந்தன. சில தடுப்பு வேலிகள் காரின் முன் சக்கரங்களுக்கு அடியில் ஆக்கிக் கொண்டிருப்பதையும் அந்த புகைப்படங்களில் காணலாம்.

மற்றொரு வாகனம் வலது பக்கத்தில் முக்கியமாகவும் பம்பர் கழன்றும் சிறிய சேதம் ஏற்பட்டும் காணப்படுகிறது. விபத்து சம்பந்தப்பட்ட 2 வாகனங்களிலும் உள்ள காற்றுப்பைகள் விரிந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர்.

இது குறித்த சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு காலை 8:00 மணி அளவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு அவர்கள் வந்த போது அங்கு காயம் அடைந்த நிலையில் ஒருவர் இருந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக ஃராபிள்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK