சிங்கப்பூருக்கு கிடைத்த பெருமை..!!2026: IMD உலகப் போட்டித் தன்மை தரவரிசை பட்டியல் வெளியீடு..!!

சிங்கப்பூருக்கு கிடைத்த பெருமை..!!2026: IMD உலகப் போட்டித் தன்மை தரவரிசை பட்டியல் வெளியீடு..!!

2026 IMD உலகப் போட்டித் தன்மை தரவரிசை பட்டியல்’ (நேற்று) ஜூன் 18 வெளியிடப்பட்டது.

இந்த தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தையும் ஹாங்காங் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. சிங்கப்பூர் ஸ்விட்சர்லாந்தை பின்னுக்கு தள்ளியுள்ளது. அதாவது ஸ்விட்சர்லாந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்ததற்கான காரணங்கள் என்ன?
வணிகச் செயல்திறனில் சிங்கப்பூர் உலகளவில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப தீவிரமாக செயல்படும் திறன் சிங்கப்பூருக்கு பைட் கொடுத்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

உறுதியான நிறுவனங்கள் மற்றும் வலுவான அரசாங்க கட்டமைப்பு உலகளாவிய பொருளாதார இயற்ற இறக்கங்களை சமாளிப்பதற்காகவும் பெரும் உதவியாக இருந்துள்ளது.

சுவிட்சர்லாந்து பின் தங்கியதற்கான காரணங்கள் என்ன?
அமெரிக்காவின் புதிய வர்த்தக கட்டணங்கள் மற்றும் தடைகள் சுவிட்சர்லாந்தின் ஏற்றுமதியை பாதித்திருக்கின்றன அந்நிய நேரடி முதலீடுகள் (FDI) மற்றும் மூலதன வரத்தும் குறைந்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாணயமான பிராங்கின் மதிப்பு வலுவாக இருந்ததுனால் அந்த நாட்டில் முதலீடு செய்வது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செலவினங்களை அதிகரித்ததும் ஒரு காரணம்.

மேலும் உலகில் நிலவுகின்ற நெருக்கடி காரணமாக சுவிட்சர்லாந்தின் கருத்தொற்றுமை சார்ந்த அரசாங்க முறை முடிவுகளை எடுப்பதிலும் தாமதம் ஏற்படுத்தியது பின்னணிக்கு காரணமாக அமைந்துள்ளது.

விலை உயர்ந்த நாணய மதிப்பு மூலதன ஈர்ப்பை பாதிப்பதாகவும் விலைகளுக்கான தரவரிசையில் சரிவை ஏற்படுத்துவதாகவும் IMD இன் உலகப் போட்டித் தன்மை மையத்தின் இயக்குனர் ஆர்ட்டுரோ பிரிஸ் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவையும் ஸ்விட்சர்லாந்தின் செயல் திறன் குறைபாட்டையும் தற்போது காண முடிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

பட்டியலில் உயர்தரம் பெற்ற ஐரோப்பிய நாடாக சுவிட்சர்லாந்து தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் ஆசிய நாடான ஹாங்காங் அதனை முந்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு தரவரிசை பட்டியலில் பெற்ற அதே முதலீடத்தை சிங்கப்பூர் தற்போது வரை தக்க வைத்துள்ளது.

அதற்கு அதன் வர்த்தக திறன் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK