உறிஞ்சு குழல் தர மறுத்ததால் விபரீத முடிவு..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

உறிஞ்சு குழல் தர மறுத்ததால் விபரீத முடிவு..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

சிங்கப்பூர்: அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடையில் தனக்கு உறுஞ்சி குழல் தர மறுக்கப்பட்டதால் விபரீத செயலில் ஈடுபட்ட நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள 55 வயதான வூ ஷிஜியன், ரொட்டி மற்றும் பானம் வாங்குவதற்காக கடைக்குச் சென்று இருக்கிறார். அங்கு கடைக்காரரான 42 வயதுடைய பிரபு கருப்பையாவிடம் உறிஞ்சி குழல் கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த கடைக்காரர் அவருக்கு அதை தருவதற்கு மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த வூ கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .

கோபத்துடன் கடையில் இருந்து புறப்பட்ட வூ சில நிமிடங்களுக்குப் பிறகு கையில் 2 கதைகளை ஏங்கியபடி கடைக்கு திரும்பி வந்து கடைக்காரரை மிரட்டியுள்ளார். மேலும் கடையில் உள்ள பணப்பெட்டியை வூ தட்டியும் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் ஆனது மே மாதம் 1-ஆம் தேதி அன்று பிற்பகல் 1:57 மணியளவில் 78 ரெட்ஹில் லெனில் நிகழ்ந்தது.

சம்பவம் குறித்து கடை உரிமையாளர் கருப்பையா உடனடியாக காவல்துறைக்கு புகார் அளித்தார். தான் வசிக்கும் அதே பிளாக்கில் வசிப்பவர்தான் அந்த வூ எனவும் அவர் தெரியப்படுத்தியிருந்தார்.

இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினார் வூ மீது நீதிமன்றத்தில் குற்றப்பதிவு செய்தனர். வூக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே பலமுறை சட்ட நடவடிக்கைகளை எதிர் கொண்டிருக்கும் பழைய விதி மீறல்களுக்காகவும் 7 நாட்கள் சிறை தண்டனையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK