உட்லண்ட்ஸில் அடுத்தடுத்து நிகழும் விபத்துகள்..!! தீர்வு எப்போது..??

உட்லண்ட்ஸில் அடுத்தடுத்து நிகழும் விபத்துகள்..!! தீர்வு எப்போது..??

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே அடுத்தடுத்து நிகழும் விபத்துகளால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது. தொடர்ந்து நடைபெறும் விபத்துக்களால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இன்று (ஜூன் 20) காலை 4 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தால், நான்கு வழித்தடங்களில் ஒன்றில் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது.

அந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 34 வயது ஓட்டுநர் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார்.

குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) இன்று காலை 9:35 மணியளவில் தனது முகநூல் பக்கத்தில் நான்கு வழித்தடங்களில் ஒன்று தடுக்கப்பட்டு உள்ளதாகவும், பயணிகள் இதனால் தாமதங்களை சந்திக்க நேரிடலாம் எனவும் குறிப்பிட்டிருந்தது.

பிற்பகல் 1:11மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் விபத்து நடந்த இடம் சீரமைக்கப்பட்டு அனைத்து பகுதிகளும் பழைய நிலைக்கு திரும்பியதாகவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அதனைத் தொடர்ந்து சோதனைச் சாவடி அருகே 2 வாகனங்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட மற்றொரு சாலை விபத்தும் ஏற்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சோதனைச் சாவடிக்கை அருகே உள்ள நான்கு வழித்தடங்களில் ஒன்றில் போக்குவரத்து தடைபட்டது.

தடைபட்ட பகுதியானது 2:59 மணியளவில் சுத்தம் செய்யப்பட்ட அனைத்து பாதைகளும் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டதாக ICA அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டனர்.

இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தவர்கள் சம்பவ இடத்தில் அதிகாரிகள் எதுவும் தேவைப்படும் அளவிற்கு விபத்து ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK