LTA அபராத எச்சரிக்கை உங்களுக்கு வந்ததா..?? அப்ப முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!!
சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அதிகாரிகள் போல் நடித்த கடந்த 3 வாரங்களில் நடந்த போலி ஆள்மாறாட்ட இணைய மோசடிகளில் 13 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
பாதிப்படைந்தவர்கள் $74,000 க்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு LTA அனுப்புவது போன்ற ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் உங்களின் மின்னியல் சாலை கட்டணம் நிலுவையில் உள்ளதாகவும், கூடுதல் அபராதத்தை தவிர்க்க உடனே கட்டணத்தை செலுத்துமாறு எச்சரிக்கப்பட்டு இருக்கும்.
கட்டணம் செலுத்துவதற்காக அந்த செய்தியில் ஒரு லிங்க் (LINK) கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்தால், அது அசல் LTA அல்லது One- Motoring இணையதளம் போலவே வடிவமைக்கப்பட்ட போலி இணையதளத்திற்கு அழைத்துச் செல்லும்.
அந்தப் போலி பக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வாகன எண், வங்கி விவரங்கள் மற்றும் கிரெடிட்/டெபிட் கார்டு எண்களை பதிவு செய்வது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும்.
பின்பு தங்களது வணங்கி கணக்கில் இருந்து தங்களுக்கேத் தெரியாமல் பெரிய தொகைகள் எடுக்கப்பட்டதை பொதுமக்கள் அறிந்த பின்னரை ஏமாற்றப்பட்டிருப்பதை அவர்கள் உணருகிறார்கள்.
இதுபோன்ற இனிய மோசடிகளில் ஏமாறாமல் இருப்பதற்காக LTA சில முக்கிய தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது அவை பின்வருமாறு: 👉LTA அனுப்பும் அதிகாரப்பூர்வ குறுஞ்செய்திகளில் பணம் செலுத்தக் கோரி எந்த ஒரு இணையப்பக்க லிங்க்கும் (URL Links) இணைக்கப்பட்டு இருக்காது.
👉LTA அனுப்பும் SMS அனைத்தும் எப்போதும் “gor.sg” என்ற அதிகாரப்பூர்வ அனுப்புநர் அடையாளத்துடன் மட்டுமே வரும்.
👉வாகன உரிமையாளர்கள் தங்களின் OneMotoring கணக்கில் உள்ள மின்கடிதங்களை (E-letters) தங்களின் சிங்பாஸில் (SingPass) லாகின் மூலமாக மட்டுமே பாதுகாப்பாகப் பார்க்க முடியும்.
எப்பொழுதும் தங்களது வங்கி விவரங்களையோ அல்லது ஒருமுறை பயன்படுத்தும் கடவுச் சொல்லையோ (OTP) அறிமுகம் இல்லாத இணையப் பக்கங்களில் பொதுமக்கள் பகிர வேண்டாம் எனவும் LTA கேட்டுக் கொண்டுள்ளது.