நம்ப முடியுமா..?? 5G யுகத்திலும் 2G இணைய சேவையுடன் இருக்கும் நாடு..!!

நம்ப முடியுமா..?? 5G யுகத்திலும் 2G இணைய சேவையுடன் இருக்கும் நாடு..!!

இன்றைய உலகம் 5G தொழில்நுட்பத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. அதிவேக இணையம், செயற்கை நுண்ணறிவு, கிளவுடு(Cloud) சேவைகள் என இணையம் மனித வாழ்வின் அத்தியாவசிய பகுதியாக மாறிவிட்டது.

ஆனால் இந்த 5G காலகட்டத்திலும் இன்னும் 2ஜி அளவிலான மிகவும் குறைந்த இணைய வசதியுடன் இயங்கி வரும் நாடு ஒன்று உள்ளது. அந்த நாட்டின் பெயர் எரித்ரியா ஆகும்.

ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எரித்ரியாவில் இணைய சேவைகள் முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. ‘எரிடெல்’ என்ற அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் மட்டுமே சேவைகளை வழங்குகிறது.

மொபைல் இணைய பயன்பாடு மிகவும் குறைவாக இருப்பதுடன் பல பகுதிகளில் இன்னும் 2ஜி தரத்திலான இணைப்புகளை கிடைக்கின்றன.

வீட்டு பிராட்பேண்ட் மற்றும் அதிவேக மொபைல் டேட்டா சேவைகளும் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. இதனால் கல்வி, வணிகம், தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி போன்ற துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இணைய வழி கல்வி, ஆன்லைன் சேவைகள் மற்றும் உலகளாவிய வேலைவாய்ப்புகளை மக்கள் எளிதில் பயன்படுத்த முடியாத நிலை தொடர்கிறது.

உலகம் 5ஜி வேகத்தில் பாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் 2 ஜி இணைய வசதியை பெரிதும் சார்ந்து வாழும் நாடாக எரித்ரியா தனித்துவமாக திகழ்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு உதாரணமாகவும் இந்த நாடு பார்க்கப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK