தாய்லாந்தில் நடந்த கோர விபத்து..!! பரிதாபமாக உயிரிழந்த துறவிகள்.!! எத்தனை பேர்..??
தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற வாகனம் ஒரு கோர விபத்தை ஏற்படுத்தி உள்ளது.
முக்தாஹான் மாகாணத்தில் 35 புத்த துறவிகள் மற்றும் ஐந்து பேரடங்கிய குழுவினர் சாலையோரம் புனித யாத்திரை யாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சிறுவன் ஒருவன் தனது பெற்றோரின் பிக்கப் வாகனத்தை அனுமதி இல்லாமல் எடுத்துக்கொண்டு ஓட்டியுள்ளான்.
திடீரென கட்டுப்பாட்டை இழந்த காரானது யாத்திரைக்கு நடந்து சென்ற துறவிகள் மீது அதிவேகமாக மோதியுள்ளான்.
சமூக இடத்திலேயே 5 துறவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தாய்லாந்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஐ எட்டியுள்ளது.
விபத்து சிக்கிய மற்றவர்கள் முக்தாஹான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய 11 வயது சிறுவன் காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளான். குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளின் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்பது குறித்த தீவிர விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.