சிங்கப்பூரில் தேசிய சேவைகள் (National Service) கட்டாயப் பதிவு அவசியம்..!! விதிமுறைகள் என்னென்ன..??

சிங்கப்பூரில் தேசிய சேவைகள் (National Service) கட்டாயப் பதிவு அவசியம்..!! விதிமுறைகள் என்னென்ன..??

சிங்கப்பூர்: 1970 இல் நடைமுறைக்கு வந்த தேசிய சேவை கட்டாயம் ராணுவ சேவை சட்டத்தின் பிரிவு 3-க்கு இணங்க, சிங்கப்பூர் ஆண் குடிமக்கள் மற்றும் நிரந்தர வசிப்பாளர்கள் தேசிய சேவைகள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சு இன்று (ஜூலை 3) ஒரு பணியாளர் பதிவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

யாரெல்லாம் பதிவு செய்ய வேண்டும்?
2009 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை பிறந்த ஆண்குடிமக்கள் மற்றும் நிரந்தர வசிப்பாளர்கள் தேசிய சேவைக்கு கட்டாயமாக பதிவு செய்தல் வேண்டும்.

எந்த தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்?
ஜூலை 8 முதல் ஜூலை 28க்குள் தேசிய சேவைகள் அனைத்து சிங்கப்பூர் ஆண் குடிமக்களும் நிரந்தர வசிப்பாளர்களும் பதிவு செய்திருத்தல் கட்டாயம்.

பதிவு செய்யும் முறைகள்:
http://www.ns.gov.sg என்ற தேசிய சேவை இணையதளத்தில் உள் நுழைவதன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

91 ஹில் வியூ லிங்க் ரோட்டில் அமைந்துள்ள மத்திய மனிதவள பணியகத்தில் நேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

அறிவிப்பு கடிதம்:
தகுதியுள்ள நபர்களுக்கு இதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் (NS Notice) மற்றும் வழிமுறைகள் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

தேவையான ஆவணங்கள்:
பதிவு மற்றும் ஆவணப்படுத்தல் செயல்முறையை முடிப்பதற்கு Singpass, குடும்ப விபரங்கள், கல்வி விவரங்கள் போன்ற முக்கிய தகவல்கள் தேவைப்படும். மேலும் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வதற்கு CMPB Registration Guide என்ற பக்கத்தை பார்வையிடலாம்.

மருத்துவ பரிசோதனை செய்யும் இடம் மற்றும் நாள்:
அதிகாரிகளால் வேறுவிதமாக அறிவிக்கப்படாவிட்டால் ஒவ்வொரு பதிவு செய்தவரும் பதிவு செயல் முறையை நிறைவு செய்யும்போது செப்டம்பர் 9 2026 முதல் அக்டோபர் 7 2026 வரையிலான காலகட்டத்தில் மருத்துவ பரிசோதனைக்கு தேதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் மருத்துவ பரிசோதனைக்கு ஒரு சந்திப்பு நேரத்தை முன்பதிவு செய்ய வேண்டும்.

இடம்: 91 Hillview Link, Singapore 669723

தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணிக்குள் மருத்துவ பரிசோதனைக்காக மத்திய மனிதவள பணியகத்திற்கு செல்ல வேண்டும்.

முக்கிய நோக்கம்: ராணுவ சேவைக்கு உடல் மற்றும் மன ரீதியாக தகுதியுடையவர்களாக என்பதை கண்டறிய இந்த பரிசோதனை நடத்தப்படுகிறது.

கல்வி தொடர முடியுமா?
நீங்கள் சிங்கப்பூரில் முழு நேர படிப்பை தொடரும் மாணவராக இருந்தால் சேவையில் சேர்வதை தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம்.

ஆன்லைனில் தேசிய சேவைக்கு பதிவு செய்யும்போதே இந்த கல்வி ஒத்திவைப்பிற்கும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி அல்லது கல்வி நிறுவனம் வழங்கிய அதிகாரப்பூர்வ செயற்கை கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

பதிவு செய்யாவிடில் தண்டனை என்ன?
சிங்கப்பூர் சட்டப்படி தகுதியான அனைத்து ஆண்களும் தேசிய சேவைக்கு பதிவு செய்வது சட்டரீதியான கடமையாகும். குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்யாமல் தவிர்த்தாலும் அல்லது வேண்டுமென்றே தாமதப்படுத்தினாலோ சட்டப்படி குற்றமாகும். இதற்கு அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

மேலும் விவரங்களுக்கு MINDEF NS Registration என்ற அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தை அணுகலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK