சிங்கப்பூரில் சாலை கடக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க..!!

சிங்கப்பூரில் சாலை கடக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க..!!

சிங்கப்பூரில் பாதசாரிகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சாலை கடக்கும்போது கீழ்க்கண்ட விதிகளை பாதசாரிகள் அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

👉 Pedestrian Crossing, Traffic Light அல்லது Overhead Bridge உள்ள இடங்களில் மட்டுமே சாலையை கடக்க வேண்டும்.

👉 பச்சை மனித உருவ (Green Man) சிக்னல் எரிந்த பிறகே சாலையை கடக்க வேண்டும்.

👉சிகப்பு சிக்னல் எரியும்போது சாலையை கடக்கக் கூடாது.

👉சாலை கடக்கும் முன் இருபுறமும் வாகனங்கள் வருகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

👉 மொபைல் போன் பயன்படுத்திக்கொண்டோ, ஹெட்போன் அணிந்துகொண்டோ கவனக்குறைவாக சாலையை கடக்கக் கூடாது.

👉 சாலையில் ஓடாமல், அமைதியாகவும் எச்சரிக்கையுடனும் கடக்க வேண்டும்.

👉குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் செல்லும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

👉 Jaywalking (குறிப்பிட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் சாலையை கடப்பது) சிங்கப்பூரில் சட்டப்படி குற்றமாகும். விதிமீறினால் அபராதம் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

👉 உங்கள் பாதுகாப்பும், பிறரின் பாதுகாப்பும் உங்கள் கைகளில்தான். சாலை விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக பயணிப்போம்.