ஒரே நொடியில் தலைகீழாக கவிழ்ந்த வேன்..!! பீஷானில் அதிர்ச்சி சம்பவம்..!!

ஒரே நொடியில் தலைகீழாக கவிழ்ந்த வேன்..!! பீஷானில் அதிர்ச்சி சம்பவம்..!!

சிங்கப்பூரின் பீஷான் வட்டாரத்தில் நிகழ்ந்த கொடூர வாகன விபத்தில் வேன் ஒன்று மோதியதில் பெண் பாதசாரி ஒருவர் பலத்த காயமடைந்து  டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அபாயகரமான முறையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக வேன் ஓட்டுநரை காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த விபத்தானது நேற்று (ஜூலை 10) பிற்பகல் 1:10 மணி அளவில் பீஷான் ஸ்ட்ரீட் 13 இல் நிகழ்ந்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த வெள்ளி நிற வேன் ஒன்று, காற்றில் பறந்து வந்து நடைபாதையின் கூரையில் மோதியுள்ளது. பின்னர் அங்கிருந்த ஒரு பெண் மீது மோதிவிட்டு, பக்கவாட்டில் தலைகீழாக அந்த வேன் கவழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குவோ சுவான் பிரெசிபிட்டேரியன்  உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள பீஷான் ரிட்ஜஸ் HDB குடியிருப்புப் பகுதிக்கு முன்பாக நடந்துள்ளது.

வேன் மோதிய வேகத்தில் அந்தப் பெண்ணின் கால்கள் முறுக்கிக்கொண்டு, உடலில் ரத்தக் காயங்களுடன் அவர் சாலையில் விழுந்து கதறியதாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) அவரை உடனடியாக மீட்டு டான் டோக் செங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

விபத்தின் தாக்கத்தால் வேனின் முன் கண்ணாடி மற்றும் ஒரு சக்கர முற்றிலும் உடைந்த சிதறியதுடன், அங்கிருந்த தங்குமிட நடைபாதைக் கூரையின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.