60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!!
கண்ணூர் மாவட்டம் கரிவெள்ளூர் பாலக்குன்னு என்ற இடத்தைச் சேர்ந்தவர் பி.பி. ராகவன். இவர் முதலில் 1967ஆம் ஆண்டு பூட்டான் லாட்டரி சீட்டை வாங்கினார். அதிர்ஷ்ட தேவதை தன்னை தேடி வருவான் என்ற நம்பிக்கையில் சீட்டுகளை எடுத்தார்.
பரிசுத்தொகை விழாத நிலையிலும் ஆண்டு கணக்கில் எடுத்த அவர் 60 ஆண்டுகளாக லாட்டரி மோகத்தில் இருந்து வருகிறார்.
ஆனால் அவரை அதிர்ஷ்டம் நெருங்காமல் துரதிஷ்டமே வந்துள்ளது. அந்த வகையில் அவர் இதுவரை சுமார் ரூபாய் 2 கோடியை இழந்துள்ளார்.
இதைப்பற்றிய அவர் கூறுகையில் இதுவரை வாங்கிய லாட்டரி சீட்டுகள் அனைத்தும் ஐந்து சாக்குகளில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மூன்று எண்களுக்கு நாலாயிரம் ரூபாய் மதிப்புள்ள பூடான் லாட்டரி எனக்கு பலமுறை பரிசு கிடைத்துள்ளது. இதுதான் என்னுடைய அதிகபட்ச பரிசு தொகை என்று குறிப்பிட்டுள்ளார்.
லாட்டரி சீட்டு எடுத்த கோடீஸ்வரர் ஆன அதிர்ஷ்டசாலிகளும் உண்டு அதே சமயத்தில் லாட்டரி மோகத்தில் பல கோடிகளை இழந்தவர்களும் உண்டு. இதற்கு பெரிய உதாரணமாக திரு ராகவன் அவர்களும் உள்ளார்.
விவசாயியான அவர் 2 1/2 ஏக்கர் நிலத்தில் நெல் தென்னை மற்றும் வாழை பயிரிட்டு வருமானத்தை ஈட்டி வந்ததாக கூறியுள்ளார். அந்த பணத்தை வைத்து தான் லாட்டரி சீட்டுகள் வாங்கி இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் கடன் வாங்கில் ஆட்டரை சீட்டு வாங்கியதால் சொத்துக்களையும் மனைவியின் நகைகளையும் விற்றதாகவும் கடன் என தெரிந்ததும் நண்பர்களும் என்னிடமிருந்து விலகி விட்டதாகவும் கூறியுள்ளார்.
தற்போது மனைவியுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறேன் எனினும் லாட்டரி சீட்டு வாங்குவது நிறுத்தவில்லை. என்றாவது கோடீஸ்வரர் ஆவேன் என நம்பிக்கையுடன் இருப்பதாக உற்சாகத்துடன் அவர் பதில் அளித்துள்ளார்.