புக்கிட் படோக்கில் பரபரப்பு..!! குடியிருப்பில் பயங்கர தீ விபத்து..!!

புக்கிட் படோக்கில் பரபரப்பு..!! குடியிருப்பில் பயங்கர தீ விபத்து..!!

புக்கிட் படோக் வெஸ்ட் அவென்யூ 4-ல் உள்ள ஒரு குடியிருப்பில் நேற்று (ஜூலை 15) அதிகாலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் புகை சுவாசித்ததால் சிகிச்சைக்காக ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார்.

புக்கிட் படோக் வெஸ்ட் அவென்யூ 4, பிளாக் 412-ல் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாலை 3:15 மணி அளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பின் படுக்கை அறையில் இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது.

SCDF தீயணைப்பு வீரர்கள் ஓர் நீர் உந்துதலைப் ( Water Jet) பயன்படுத்தி தீயை வெற்றிகரமாக அணைத்தனர்.


அந்தத் தொகுதி எம்பி லீ ஹாங் சுவான் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு தற்காலிக தங்குமிடம் மற்றும் புதிய படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்துள்ளார்.

இதுகுறித்த அவர் தனது முகநூல் பக்கத்தில் நேற்று (ஜூலை 15) பதிவிட்டு இருந்தார். அனைவரும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதை அறிந்து நிம்மதி அடைந்ததாக அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் குறித்து SCDF அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK