சிங்கப்பூர் PR பெயரில் போலி வேலை..!! பெண்ணின் மோசடி அம்பலம்!

சிங்கப்பூர் PR பெயரில் போலி வேலை..!! பெண்ணின் மோசடி அம்பலம்!

வெளிநாட்டவருக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசி தகுதி(PR) பெற்று தருவதாகக் கூறி, போலியான வேலை ஏற்பாடுகள் மூலம் ஏமாற்றிய 43 வயது சிங்கப்பூர் பெண்ணான வாங் ஜுயேவுக்கு 10 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வேலை அனுமதிச் சீட்டுக்கான (Employment Pass) விண்ணப்பப் படிவத்தில் பொய்த் தகவல்களைச் சமர்ப்பித்த குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) அன்று அப்பெண்ணுக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

வெளிநாட்டினர் சிங்கப்பூர் PR தகுதி பெறுவதற்கான முதற்படியாக போலியான வேலை வாய்ப்பு ஏற்பாடுகள் மூலம் வேலை அனுமதி சீட்டுகளை வழங்கும் ஒரு நவீன குடியேற்ற முதலீட்டு திட்டத்தை வாங் திட்டமிட்டு நடத்தினார்.

சிங்கப்பூர் PR தகுதியைப் பெற விரும்பிய சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர், MW நிறுவனத்தில் போலி வேலை ஏற்பாட்டைப் பெற $360,000 தொகையை முதலீடாக வழங்கியுள்ளார்.

இந்த மோசடித் திட்டத்திற்காக சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றைக் கண்டறிந்து, அரசாங்கத்தை ஏமாற்ற பக்காத் திட்டம் தீட்டப்பட்டதாக மாவட்ட நீதிபதி டான் ஜென் சே சுட்டி காட்டினார்.

தற்போது வாங் தனது தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

சிங்கப்பூர் PR தகுதிப் பெற்று தருவதாக சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் ஏமாற்றும் மூன்றாம் தரப்பு முகவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், குடியேற்ற விண்ணப்பங்களை எப்போதும் குடியேற்ற சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.