செராங்கூன்–ஈனோஸ் பேருந்து ஒப்பந்தம்: 2027 முதல் சேவையை இயக்கும் SMRT..!!

செராங்கூன்–ஈனோஸ் பேருந்து ஒப்பந்தம்: 2027 முதல் சேவையை இயக்கும் SMRT..!!

சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) செராங்கூன்- ஈனோஸ் பேருந்துத் தொகுப்பை இயக்குவதற்கான $599.5 மில்லியன் மதிப்புள்ள 5 ஆண்டு ஒப்பந்தத்தை SMRT பஸ்சஸ் (SMRT Buses) நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

இதன் மூலம் 2027 ஜூன் 13 முதல் இப்பகுதியின் 26 பேருந்துச் சேவைகளை SBS ட்ரான்சிட் நிறுவனத்தில் இருந்து SMRT அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கும்.

SMRT நிறுவனம் பேருந்துச் சேவைகளை இயக்குவதுடன் செராங்கூன், ஈனோஸ், உட்லீ ஆகிய பேருந்து நிலையங்களையும், சிம்ஸ் பிளேஸ் பேருந்து நிலையத்தையும் இனி நிர்வகிக்க உள்ளது.

இந்தப் பேருந்து சேவைகள் அனைத்தும் பணிமனையிலிருந்து மாற்றப்பட்டு, புதிதாக திறக்கப்பட உள்ள கிம் சுவான் பேருந்து பணிமனையில் இருந்து இயக்கப்படும்.


மின்சாரப் பேருந்துகளை இயக்குவதிலும் பராமரிப்பதிலும் SMRT காட்டிய சிறந்த திறன் மற்றும் சேமிப்புத் திட்டம் ஆகியவற்றிற்காக இந்த ஒப்பந்தம் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அங்கு பணியாற்றி வரும் SBS டிரான்சிட் ஊழியர்களுக்கு அதே தரத்திலான ஊதியம் மற்றும் பணி விதிமுறைகளுடன் SMRT நிறுவனத்தில் இணைய வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.

 

இந்த ஒப்பந்தத்தை மேலும் 2 முதல் 5 ஆண்டுகள் வரை நீட்டிப்பதற்கான கூடுதல் உரிமைத்தையும் LTA தன் வசம் வைத்துள்ளது.