சர்வதேச பயணிகளுக்கான முக்கிய எச்சரிக்கை: 'ஏர் சுவிதா 2.0' படிவம் கட்டாயம் ஆக்கப்பட்டது!
வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கானதுதான். சர்வதேச அளவில் எபோலா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில், இந்திய அரசு பயணிகளுக்கான புதிய சுகாதார விதிகளை வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கு வரும் பல பயணிகளுக்கு இன்னமும் இந்த புதிய விதிமுறையைப் பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கிறது. விமான நிலையத்தில் தேவையில்லாத காலதாமதத்தைத் தவிர்க்க பயணிகள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
ஏர் சுவிதா 2.0 (Air Suvidha 2.0) என்றால் என்ன? எபோலா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்திய சுகாதார அமைச்சகம் ‘ஏர் சுவிதா 2.0’ (Air Suvidha 2.0) என்ற புதிய சுய பிரகடனப் படிவத்தை (Self-Declaration Form) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஜூன் 25 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் நுழையும் அனைத்துப் பயணிகளும் இந்த படிவத்தைப் பூர்த்தி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கவனிக்க வேண்டிய முக்கிய நடைமுறைகள்: 24 மணி நேரத்திற்கு முன்பாக பூர்த்தி செய்ய வேண்டும்: இந்தியா வந்து சேர்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவே இந்த ‘ஏர் சுவிதா 2.0’ படிவத்தை இணைய வழியில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யாவிட்டால் என்ன நிகழும்?: நீங்கள் இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், விமான நிலையத்தில் சுகாதாரச் பரிசோதனைகள் முடித்து வெளியே வர மிக நீண்ட நேரம் ஆகலாம் அல்லது சிரமங்களைச் சந்திக்க நேரலாம்.
டிவத்தை எப்படி பூர்த்தி செய்வது? Google-ல் சென்று “Air Suvidha 2.0” எனத் தேடவும். அதிகாரப்பூர்வ இணையதள லிங்கை (Link) கிளிக் செய்து உள்ளே செல்லவும். அதில் கேட்கப்பட்டுள்ள உங்களின் தனிப்பட்ட மற்றும் பயண விவரங்களை நிரப்பவும்.
முக்கிய கேள்விகள்: சமீபத்தில் எபோலா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளீர்களா? எபோலா வைரஸிற்கான அறிகுறிகள் (காய்ச்சல், உடல் சோர்வு போன்றவை) ஏதேனும் உங்களுக்கு இருக்கிறதா?
கேட்கப்பட்டுள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான தகவல்களை அளித்து படிவத்தைச் சமர்ப்பிக்கவும் (Submit).
முக்கியக் குறிப்பு: இனிமேல் வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் அனைவரும் இந்த ‘ஏர் சுவிதா 2.0’ படிவத்தைப் பூர்த்தி செய்வதை மறக்க வேண்டாம். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாரேனும் வெளிநாட்டிலிருந்து இந்தியா வரத் திட்டமிட்டிருந்தால், அவர்களுக்கு இந்தத் தகவலை உடனடியாகப் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!