HDB நடைபாதையில் தலையணையை திருடிச் சென்ற நபர்.. CCTV-யில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

HDB நடைபாதையில் தலையணையை திருடிச் சென்ற நபர்.. CCTV-யில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

சிங்கப்பூரில் HDB குடியிருப்பின் நடைபாதையில் உலர வைக்கப்பட்டிருந்த தலையணைகளில் ஒன்றை, அடையாளம் தெரியாத நபர் எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி காலை சுமார் 9:48 மணியளவில் உட்லண்ட்ஸ் 41வது தெருவில் உள்ள HDB குடியிருப்பில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பின் நடைபாதையில் உள்ள தடுப்புக் கம்பியில் சில தலையணைகள் உலர வைக்கப்பட்டிருந்தன. அப்போது அங்கு வந்த ஒருவர், அந்தத் தலையணைகளை ஒவ்வொன்றாகத் தொட்டுப் பார்த்துள்ளார்.

பின்னர் தனக்குப் பிடித்த தலையணை ஒன்றைத் தேர்வு செய்தது போல், அதில் ஒன்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

அவரது இந்தச் செயல் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து, தலையணையின் உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

எடுத்துச் செல்லப்பட்ட தலையணை தனது மகளுக்கு மிகவும் பிடித்தமானது என்று அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

பிறருடைய பொருட்களை அவர்களிடம் கேட்காமல் எடுத்துச் செல்லும் மனநிலை இன்னும் இருப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பான CCTV காட்சிகளை காவல்துறையிடம் ஒப்படைத்ததுடன், குடியிருப்பாளர்கள் தங்களுடைய தனிப்பட்ட பொருட்களை கவனமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தச் சம்பவத்தை பொதுவெளியில் பகிர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் கிடைத்திருப்பதை சிங்கப்பூர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

HDB நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த ஒரு தலையணையை ஒருவர் தேர்வு செய்து எடுத்துச் சென்ற சம்பவம், அப்பகுதி குடியிருப்பாளர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.