சிங்கப்பூரில் நீரிழிவு நோயாளிகளுக்கான பரிசோதனை சேவை விரிவாக்கம்...!!!
சிங்கப்பூர்: இன்றைய காலகட்டத்தில் நீரழிவு நோய் என்பது சர்வ சாதாரணமாக அனைவருக்கும் காணப்படுகிறது. இதன் காரணமாக சிங்கப்பூரில் நீரிழிவு நோயால் கால் மற்றும் கண்களில் ஏற்படும் சிக்கல்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தவிர்ப்பதற்காக, “நீரிழிவு பரிசோதனை சேவை திட்டம்” சமூகத் தோழர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
NHG ஹெல்த் வடமத்திய முதன்மை பராமரிப்பு வலையமைப்பு, சமூகக் கூட்டாளர்களுடன் இணைந்து இந்த திட்டத்தின் சமூகப் பயன்பாட்டைப் பெரிதும் விரிவுபடுத்தி வருகிறது.
2023ஆம் ஆண்டு தொடங்கிய இந்தத் திட்டம், இதுவரை 700க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பயனளித்துள்ளது. 92 மருத்துவமனைகள் உள்ளிட்ட 12 இடங்களில் “ஒரே இடத்தில் பரிசோதனை” வசதியுடன், நோயாளிகள் அருகிலேயே பரிசோதனை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
“ஆரோக்கியமான SG” திட்டத்தின் கீழ், பரிசோதனைக்குப் பிறகு நோயாளிகள் செவிலியர் ஆலோசனை உள்ளிட்ட நாள்பட்ட நோய் மேலாண்மை சேவைகளைப் பெற முடியும்.
ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூரில் நீரழிவு நோயால் 1,500 க்கும் மேற்பட்ட உடல் உறுப்புகள் துண்டிக்கப்படுகின்றன.
இது, நாட்டில் குருட்டுத்தன்மைக்கான முக்கிய காரணமாகவும் உள்ளது. வழக்கமான பரிசோதனைகள், உறுப்புகளை துண்டிக்க வேண்டிய அவசியத்தை 85% வரை குறைக்க உதவும் என தரவு காட்டுகிறது.
அடுத்த கட்டமாக, ஒவ்வொரு பங்கேற்பு கிளினிக்கிற்கும் அருகில் குறைந்தது ஒரு சமூக பரிசோதனை மையத்தை அடுத்த ஆண்டு அமைக்கவும் குழு திட்டமிடப்பட்டுள்ளது.