சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா!! அவர் எப்படி நுழைந்தார் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!
கடந்த மே மாதம் இந்தோனேசியாவைச் சேர்ந்த 4 பேர் புலாவ் தெக்கோங் அருகே சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற பொழுது கடலோரக் காவல் படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
தண்டனை விதிக்கப்பட்ட மூவர் ஏற்கனவே சிங்கப்பூரில் குடிநிறைவு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் வேலை வாய்ப்புக்காக அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற போது அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்டபோது அந்த ஆடவர்களிடம் இருந்து வரி செலுத்தப்படாத 260 சிகரெட் பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் மூன்று பேர் 2021 ஆம் ஆண்டுக்கும் 2024 ஆண்டுக்கும் இடையில் குடிநிறைவு குற்றங்களில் ஈடுபட்டதால் தண்டிக்கப்பட்டனர் அதன் பின் அவர்கள் நாடு கடத்தப்பட்டனர் மீண்டும் அதே தவறை செய்துள்ளனர்.