சிங்கப்பூர் - இந்தியா அமைச்சர்கள் 3 - வது வட்டமேசைக் கூட்டம்!!!
வளர்ந்து வரும் வளர்ச்சித் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த சிங்கப்பூருக்கும் ISMR ஒரு முக்கிய தலைமை என சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்று (ஆகஸ்ட் 13ஆம் தேதி) 3- வது சிங்கப்பூர் – இந்தியா அமைச்சர்கள் வட்டமேசை கூட்டம் இந்தியாவில் புது தில்லியில் நடைபெறும்.
இந்தக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வைப்பவர் சிங்கப்பூரின் துணை பிரதமரும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான கான் கிம் யோங் ஆவார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் உள்துறை ஒருங்கிணைப்பு அமைச்சர் கே.சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் அமைச்சர் ஜோசபின் தியோ, மனிதவள அமைச்சர் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில், எரிசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பொறுப்பாளர் டான் சீ லெங், போக்குவரத்து துறை அமைச்சரும் நிதித்துறை மூத்த அமைச்சருமான சியோவ் சின் சியாங் ஆகியோர் சிங்கப்பூர் தூது குழுவின் மற்ற உறுப்பினர்களில் அடங்குவர்.
இந்த மூன்றாவது வட்டமேசைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் இந்திய அமைச்சரவை அமைச்சர்கள்: வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதி மற்றும் பெரு நிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் ஆவர்.