சிங்கப்பூரில் மூடப்படும் சிகிச்சை மையம்…!!! ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்

சிங்கப்பூரில் மூடப்படும் சிகிச்சை மையம்...!!! ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்

அட்மிரால்டி அவசர சிகிச்சை மையமானது செப்டம்பர் 2020ல் திறக்கப்பட்டது. முதன்மையாக வடக்கு பகுதியில் உள்ள ஆபத்தான நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை நியமித்து சிகிச்சை பார்க்கப்பட்டது.

இந்த மையத்தில் 15 பேர் கொண்ட மருத்துவக்குழு தற்போது மாதத்திற்கு சுமார் 1,800 நோயாளிகளுக்கு மட்டுமே சேவை செய்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளில் வடக்கு பகுதியில் அவசர சிகிச்சை பிரிவுடன் கூடிய பொது மருத்துவர்கள் செம்பவாங் பாலி கிளினிக், காதிப் பாலி கிளினிக் மற்றும் சமீபத்தில் திறக்கப்பட்ட உட்லண்ட்ஸ் மருத்துவ பூங்கா ஆகவே புதிதாக சேர்க்கப்பட்டதால் மையத்திற்கான தேவை குறைந்துள்ளது.

கூ டெக் புவாட் மருத்துவமனையை பலரும் நாடி உள்ளனர். அட்மிராலிட்டி அவசர பராமரிப்பு மையமானது அதிக மருத்துவ தேவையை சமாளிக்க திறக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது புதிய பல துறை மருந்துகள் சேவை வழங்குவதால் அதன் தேவை குறைந்ததாக நிர்வாகம் கூறியுள்ளது.

 

எனவே மருத்துவ வளங்களை இன்னும் பயனுள்ள வகையில் பயன்படுத்த நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதனால் அட்மிரால்டி அவசர பராமரிப்பு மையமானது ஆகஸ்ட் மாத இறுதியில் மூடப்படும் என்ற அறிக்கையை உட்லண்ட்ஸ் ஹெல்த் அதன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


அவசரம் இல்லாத விஷயங்களுக்கு பொதுமக்கள் தங்கள் குடும்ப மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உங்கள் நிலை அவசரமானதா என்று உங்களுக்கு தெரியாவிட்டால் நீங்கள் நர்ஸ் ஃபர்ஸ்ட் ஹார்ட் லைனை 6262 6262 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan