சிங்கப்பூரில் இப்படியொரு சம்பவமா..!!!

சிங்கப்பூரில் இப்படியொரு சம்பவமா..!!!

இரவு வேளையில் ஒன்றாக பணியாற்றியபோது, சக ஊழியர் ஆன ஆடவர் பெண்ணின் அனுமதி இன்றி அவரை தீண்டி உள்ளார்.

ஆடவர் பெண்ணின் பின்புறம் இருந்து சில நிமிடங்களுக்கு கட்டி அணைத்ததாக சொல்லப்பட்டுள்ளது.

மேலும் பெண்ணின் மறுப்பை கூட பொருட்படுத்தாமல் அவரை முத்தமிட்டு மானபங்கம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் கழிப்பறைக்கு தப்பிச்சென்று குறுஞ்செய்தி அனுப்பியதன் மூலம் உதவியை நாடியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் புகார் கொடுத்தார்.

குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் வயது 42. அவரது பெயர் குறித்து தகவல் வெளியிடவில்லை.

நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. மூன்று குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநல மருத்துவச் செலவுக்காக குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் 766.65 வெள்ளியை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அத்துமீறி நடந்து கொண்ட குற்றத்திற்காக 26 மாத சிறை தண்டனையும் 6 பிரம்படிகளும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan