ஜூ சியாட்டில் பற்றிய தீ..!! குடியிருப்பாளர்களின் நிலை என்ன..??

ஜூ சியாட்டில் பற்றிய தீ..!! குடியிருப்பாளர்களின் நிலை என்ன..??

ஜூ சியாட் பகுதியில் இன்று (17/12/2025) அதிகாலை சரியாக 4 மணி அளவில் சிகு சாலையில் உள்ள ஒற்றை மாடி வீடுகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

குடியிருப்பில் இருந்த 40 பேரை சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் வேறு இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர்.

தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசித்த ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தீ பற்றிய இரண்டு மணி நேரத்திற்கு பிறகு காலை 6:45 மணிக்கு தீ அணைக்கப்பட்டது.

தீ பற்றிய காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK