சிங்கப்பூரில் 66 வயதான மூதாட்டி பரிதாபமாக உயரிழப்பு...!! காரணம் என்ன..??
சிங்கப்பூரில் பென்கூலன் தெருப்பகுதியில் ஒரு கார் விபத்து நடந்துள்ளது.
பென்கூலன் தெருவில் உள்ள பிராஸ் பாசா சாலை நோக்கி செல்லும் வழியில் கார் விபத்து ஏற்பட்டுள்ளதாக நேற்று (மார்ச் 17) மாலை 5:15 மணியளவில் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் அந்த விபத்தில் மற்றொரு நபருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் ஏற்பட்டுள்ள நபர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து விட்டக் காரணத்தினால், அவருக்கு முதலுதவி மட்டும் செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்தானது மிடில் ரோடு மற்றும் பென் கூலன் தெரு சந்திப்பில் நடந்துள்ளதாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.