சிங்கப்பூர்: யிஷுன் அவென்யூ 6 பகுதியில் நேற்று (11.01.26) காலை சுமார் 6:40 மணியளவில் ஏற்பட்ட போக்குவரத்து விபத்தில், தவறான திசையில் சென்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு கார் எதிர் பாதையில் உள்ள விளக்கு கம்பத்தில் மோதியது.
இந்த விபத்தில் ஒருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், சிவப்பு நிற கார் விளக்கு கம்பத்தில் மோதிய நிலையில் புல்தரையில் நிறுத்தப்பட்டிருப்பதும், காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதும் காணப்படுகிறது.
விபத்து நேரத்தில் அது எதிர்திசையில் பயணித்திருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்ததாவது, ஒருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகும் அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.